தங்க சீட் பெல்ட்.. பிரச்சாரத்துக்கு சூறாவளியா சுத்துன ஹெலிகாப்டர்.. டிரம்ப் எடுத்த ‘திடீர்’ முடிவு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ஹெலிகாப்டரை விற்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் தோல்வியை சந்தித்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜோ பைடன் 290 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். இதில் டிரம்ப் 214 வாக்குகள் மட்டுமே பெற்றார். ஆனால் தற்போது வரை தனது தோல்வியை டிரம்ப் ஒப்புக்கொள்ளவில்லை. தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி நீதிமன்றத்தை நாட உள்ளதாக அவர் கூறி வருகிறார். மேலும் டிரம்பின் மனைவி மெலனியா அவரை விவாகரத்து செய்ய உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

இந்த நிலையில் டிரம்ப் தனது ஹெலிகாப்டரை விற்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மீது தீராத காதல் கொண்டவர் அதிபர் டிரம்ப். அவரிடம் 3 ஹெலிகாப்டர்கள் மற்றும் பல்வேறு சொகுசு விமானங்கள் உள்ளன. தற்போது டிரம்ப் பயன்படுத்திய Sikorsky S-76B என்ற ஹெலிகாப்டர் ஏலத்துக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஹெலிகாப்டரில் தான் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் சூறாவளியாக பிரச்சாரம் செய்தார். மேலும் இந்த ஹெலிகாப்டரின் சீட் பெல்ட் தங்கத்தால் உருவாக்கப்பட்டது என கூறப்படுகிறது. ஹெலிகாப்டரின் விலை 1 மில்லியன் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்