'பாகுபலியாக' ட்ரம்ப்... தேவசேனாவாக 'மெலனியா'... அட்டகாச வீடியோவுக்கு 'லைக்' கொடுத்து 'ஷேர்' செய்த 'ட்ரம்ப்'...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தன்னை பாகுபலியாக சித்தரித்த வீடியோவை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூலாக லைக் செய்து அதற்கான லிங்கை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வருகிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அதேபோல் பிரதமர் மோடி மற்றும் ட்ரம்ப் பங்கேற்கும் 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்கிறார்.

நாளை (பிப்ரவரி 25) காலை குடியரசுத்தலைவர் மாளிகையில் ட்ரம்புக்கு அரசுமுறை வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து சபர்மதி ஆசிரமத்திற்கு செல்லும் ட்ரம்பிற்கு, மகாத்மா காந்தி குறித்த புத்தகத்தை பிரதமர் மோடி பரிசளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

குஜராத்தில் தனது பயணத்தை முடித்துக் கொள்ளும் ட்ரம்ப், அகமதாபாத்தில் இருந்து ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு குடும்பத்தினருடன் செல்கிறார். மொத்தமாக இந்திய பயணத்தில் 36 மணி நேரத்தை செலவிட உள்ளார் ட்ரம்ப்.

இந்நிலையில் அவரது வருகையைக் குறிப்பிட்டு நெட்டிசன் ஒருவர் வீடியோ ஒன்றை உருவாக்கி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாகுபலியாக சித்தரிக்கப்பட்டு அதிரடியாக சண்டையிடுவது போன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதை ரசித்த ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வீடியோவை பதிவிட்டு, இந்தியாவில் உள்ள தனது சிறந்த நண்பர்களுடன் இருக்கப் போவதை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

 

81 விநாடிகள் உள்ள இந்த வீடியோவில் பாகுபலியாக ட்ரம்ப் தோன்றுகிறார். எதிரிகளை தனது போர்வாளால் துவம்சம் செய்கிறார் முதல் பெண்மணி மெலனியா ட்ரம்புடன் தேர் மீது சவாரி செய்கிறார். எதிரிகளை அழித்து குதிரையில் வரும் ட்ரம்ப் தனது மகன் டொனால்ட் ட்ரம்ப் ஜுனியர், மகள் இவான்கா ட்ரம்ப் ஆகியோரை தோளில் சுமந்தபடி வருகிறார். கூடியிருக்கும் மக்கள் ட்ரம்புக்கு உற்சாக வாழ்த்தகளைத் தெரிவிப்பது போன்ற அந்த வீடியோ காட்டுகிறது.

 

TRUMP, MELANIA, AMERICA, INDIA, BAHUBALI, DEVASHENA, TRUMP TWITTER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்