தினமும் 10 ஆயிரம் டாலர் அபராதம்..டொனால்டு ட்ரம்ப்-க்கு செக் வச்ச கோர்ட்.... ஓ இதான் காரணமா?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிற்கு தினந்தோறும் 10 ஆயிரம் டாலர் அபராதம் செலுத்தும்படி உத்தரவிட்டிருக்கிறது நியூயார்க் நீதிமன்றம்.

Advertising
>
Advertising

Also Read | திடீரென வைரலாகும் Elon Musk 5 வருச பழைய ட்வீட்.. அப்படியென்ன சொல்லி இருக்கார்..?

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் தன்னுடைய வணிக செயல்பாடுகள் குறித்து நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில் போதிய ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என நியூயார்க் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ட்ரம்ப்-ன் பிசினஸ் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அட்டார்னி ஜெனரல் ஜேம்ஸ் மார்ச் மார்ச் 3ம் தேதிக்குள் உரிய ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தார். அதன் பிறகு டொனால்ட் ட்ரம்ப்-ன் வழக்கறிஞர் வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு மார்ச் 31 ஆம் தேதி வரையில் இந்த கெடுவை நீதிபதி நீட்டித்தார்.

நீதிமன்ற அவமதிப்பு

வழக்கு குறித்த உரிய ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி அவகாசம் கொடுத்தும் டொனால்ட் ட்ரம்ப் தரப்பில் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாததால் நீதிபதி ஆர்தர் கோரிங், டொனால்ட் ட்ரம்ப்-ற்கு அபராதம் விதிப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் "திரு. டிரம்ப் நீங்கள் உங்களுடைய தொழிலை சரியாக செய்வீர்கள் என எனக்கு தெரியும். அதே போல நானும் என்னுடையதை சரியாகவே செய்வேன். நீங்கள் நீதிமன்றத்தை அவமதிப்பு செய்துள்ளீர்கள்" என குறிப்பிட்டார்.

கைது

மேலும் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கும் வரையில் நாள் ஒன்றுக்கு 10,000 டாலர்கள் வீதம் அபராதமாக செலுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த அபராதத்தை ட்ரம்ப் செலுத்தவில்லை என்றால் அவர் கைது செய்யப்படலாம் நியூயார்க்கைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞரான சாரா கிரஸ்ஸாப் தெரிவித்துள்ளார். வழக்கமாக இதுபோன்ற சூழ்நிலைகளில் நீதிபதி அபராதத்தை அதிகரிக்கவோ அல்லது சம்பந்தப்பட்ட நபரை கைது செய்யவோ உத்தரவிடும் என அவர் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்டு ட்ரம்ப்பிற்கு நீதிமன்றம் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் டாலர் அபராதம் விதித்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

DONALD TRUMP, FINED, டொனால்டு ட்ரம்ப், அபராதம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்