‘அதிபர் ட்ரம்புக்கு எதிராக 229 பேர் வாக்களிப்பு’!.. அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேறிய பதவி நீக்க தீர்மானம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் அந்நாட்டு அதிபர் ட்ரம்புகு எதிராக பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது பதவியை தவறாக பயன்படுத்திவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதனை அடுத்து அவரை பதிவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் பிரதிநிதிகள் சபையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அதன்படி இன்று அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.

அதில் 229 பேர் ட்ரம்புக்கு எதிராகவும், 198 பேர் ஆதரவாகவும் வாக்களித்தனர். இதனால் அதிபர் ட்ரம்ப்பை பதிவி நீக்கம் செய்யக்கோரும் தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது. இதனை அடுத்து இந்த தீர்மானம் செனட் சபைக்கு செல்லும். அங்கு ட்ரம்பின் குடியரசு கட்சிக்கு 53 உறுப்பினர்களும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கு 47 உறுப்பினர்களும் உள்ளனர். அங்கு அதிபர் ட்ரம்பை பதவி நீக்க 66 உறுப்பினர்களின் பலம் தேவை. அதனால் செனட் சபையில் ட்ரம்ப் காப்பாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

223 ஆண்டுகால அமெரிக்க வரலாற்றில் பதவி நீக்க தீர்மானத்தை எதிர்கொள்ளும் மூன்றாவது அதிபர் ட்ரம்ப் என்பது குறிப்படத்தக்கது. இதற்கு முன்னர் 1789ம் ஆண்டு முன்னாள் அதிபர் ஆண்ட்ரூ ஜான்சன் மீதும், 1868-ம் ஆண்டு பில் கிளிண்டன் மீதும் பதவி நீக்க தீர்மானம் நடைபெற்றுள்ளது.

DONALDTRUMP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்