2024 அமெரிக்க அதிபர் தேர்தல்.. போட்டியிடுவதாக அறிவித்த டொனால்ட் ட்ரம்ப்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இது அமெரிக்க அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.

2024 அமெரிக்க அதிபர் தேர்தல்.. போட்டியிடுவதாக அறிவித்த டொனால்ட் ட்ரம்ப்..!
Advertising
>
Advertising

Also Read | "வா டான்ஸ் ஆடலாம்".. ஓடும் ரயில்ல Thug Life சம்பவம் செஞ்ச தாத்தா.. பாட்டி எடுத்த ஸ்வீட் ரிவெஞ்ச்.. வைரலாகும் Cute வீடியோ..!

அமெரிக்க அரசியல் அமைப்பு சட்டத்தின்படி ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபராக பணியாற்ற முடியும். அமெரிக்காவின் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி இடையே நடைபெறும் தேர்தலில் வெற்றிபெறப்போவது யார்? என உலகமே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும். கடைசியாக 2020 ஆம் ஆண்டு நவம்பரில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றிபெற்று அந்நாட்டின் அதிபரானார்.

அமெரிக்காவின் இத்தனை ஆண்டுகால வரலாற்றில் பெரும்பாலும் முன்னர் ஆட்சியில் இருந்தவர்களே மீண்டும் போட்டியிட்டு வெற்றியும் பெறுவார்கள். சமீப ஆண்டுகளில் சிலர் மட்டுமே இரண்டாவது முறை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை தவறவிட்டிருக்கிறார்கள். அதில் டிரம்பும் ஒருவர்.

இதனையடுத்து, தேர்தலில் விதிமுறைகள் மீறப்பட்டதாக ட்ரம்ப் பல்வேறு மாகாணங்களில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ட்ரம்பின் ஆதரவாளர்கள் அதிபர் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதை உலகம் அதிர்ச்சியோடு பார்த்தது. இந்நிலையில் வரும் 2024 ஆம் ஆண்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது.

இதில் தான் போட்டியிட போவதாக அறிவித்திருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப். அண்மையில் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக ட்ரம்ப் பேசியிருந்தார். இதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய ட்ரம்ப் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் தான் போட்டியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார். அமெரிக்காவை மீண்டும் வலுப்படுத்த தான் வெற்றிபெறுவது அவசியம் எனவும் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார்.

குடியரசு கட்சியை சேர்ந்த ட்ரம்ப், கட்சிக்குள் நடைபெறும் தேர்தலில் போட்டியிட இருக்கிறார். அதிபர் தேர்தலில் போட்டியிடும் நபர் அவர்களது கட்சியின் செல்வாக்கை பெற்றிருக்க வேண்டும். ஆகவே, இதற்காக நடத்தப்படும் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ட்ரம்ப் தற்போது ஈடுபட்டு வருகிறார்.

Also Read | ராகிங் புகார்கள் குறித்து பேசிய டிஜிபி சைலேந்திர பாபு .. காவல்துறை அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு..!

DONALD TRUMP, 2024 ELECTION, PARTICIPATE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்