டாக்டராக மாறிய நாய்கள்.. ஹாஸ்பிட்டல்கள் தேவையில்லை.. வியப்பூட்டும் தகவல்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நாயின் மோப்ப சக்தி மூலம் ஒருவருக்கு புற்றுநோய் உள்ளது என்பதை எளிதில் கண்டறிந்துவிடலாம் என ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் நாய்களை செல்லப்பிராணியாக வளர்த்து வரும் நம்மில்  சிலர், அவைகளை காவல்காப்பதற்கும் பயன்படுத்துவர். நாய்களின் மோப்ப சக்தியை பயன்படுத்தி  ராணுவம், குற்ற நிகழ்வுகளைக் கண்டறிய உதவுவது எனப் பல்வேறு வகைகளில் அவை உதவியாக இருந்து வருகின்றன.

தற்போது, மருத்துவத் துறையிலும் நாய்கள் உதவியாக இருக்கின்றன என்பது அமெரிக்காவைச் சேர்ந்த பயோசென்ட் என்ற மருத்துவ ஆய்வகத்தில் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு மூத்த ஆய்வாளராக பணிபுரியும் ஹீத்தர் ஜுனகிரா  (Heather Junqueira) என்கிற ஆய்வாளர் நடத்திய முதன்மையான ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

பிரபல உயிரியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் இந்த மருத்துவ ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்கள், 2 வயதே ஆன நான்கு நாய்களை வைத்து, புற்றுநோய் கண்டறியும் ஓர் ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வு முடிவு, அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில், 'உயிர் வேதியியல் மற்றும் மூலக்கூறு உயிரியல்' தொடர்பாக அமெரிக்கன் சொசைட்டி நடத்திய வருடாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நாய்களுக்கு  மனிதர்களைக் காட்டிலும் 10,000 மடங்கு மோப்ப சக்தி இருப்பதால், இது சாத்தியம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். புற்றுநோயை உருவாக்கும் செல்களை நாய்களிடம் மோப்பம் பிடிக்கச் செய்து பழக்கப்படுத்தப்பட்டது. அதன்பிறகு,  நுரையீரல் புற்றுநோயால் பாதித்தவர்களின் ரத்த மாதிரிகளையும்,  நோய் பாதிக்காதவர்களின் ரத்த மாதிரிகளையும் அந்த நாய்களை முகர்ந்துபார்க்கவைத்தனர்.

இந்தச் சோதனை முயற்சியில், நாய்களால் மோப்பம் பிடித்த ரத்த மாதிரிகளில், 97 சதவிகிதம்  'புற்றுநோய் பாதிப்புகள் உள்ளதை' உறுதிச்செய்யப்பட்டது. இந்த ஆய்வின்மூலம் நாய்களின் மோப்பசக்தியால் புற்றுநோயைக் கண்டுபிடிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் உறுதிச்செய்துள்ளனர்.

DOGS, AMERICA, RESEARCH, SNIFF, CANCER, BLOOD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்