Skipping-லாம் அசால்ட்டுங்க.. உரிமையாளருடன் செல்ல நாய் எடுத்த முயற்சி.. ஆச்சர்யத்தில் கின்னஸ் அதிகாரிகள்.. வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தனது செல்ல நாயுடன் ஸ்கிப்பிங் விளையாடி கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார் ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஒருவர்.

Skipping-லாம் அசால்ட்டுங்க.. உரிமையாளருடன் செல்ல நாய் எடுத்த முயற்சி.. ஆச்சர்யத்தில் கின்னஸ் அதிகாரிகள்.. வீடியோ..!
Advertising
>
Advertising

Also Read | அரசியல் பயணத்துக்கு நடுவே வந்த தகவல்.. சிறுவனுக்கு ஆப்ரேஷன் செய்ய விரைந்த 'டாக்டர்' முதலமைச்சர்.. நெகிழ்ந்துபோன மக்கள்.!

சமூக வலைதளங்கள் எப்போதும் பல ஆச்சரியமான தகவல்களை மற்றும் வீடியோக்களை மிக விரைவில் பலரிடத்திலும் கொண்டு போய் சேர்த்து விடும் வல்லமை படைத்தது. மக்களின் மனதை தொடும் விஷயங்கள் எப்போதுமே இணையத்தில் வெகு விரைவில் வைரலாகி விடுவது உண்டு. அதிலும் குறிப்பாக விலங்குகள் கியூட்டாக மேற்கொள்ளும் விஷயங்கள் குறித்த வீடியோக்கள் மற்றும் பதிவுகள் சமூக வலை தளங்களில் எப்போதும் கோடிக்கணக்கான மக்களிடையே அதிக அளவில் ஷேர் செய்யப்படும். அந்த வகையில் தனது செல்ல நாயுடன் ஸ்கிப்பிங் விளையாடும்  ஒருவரின் வீடியோ தற்போது இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Dog With World Record For Most Skips On Hind Legs Video

ஜெர்மனி நாட்டின் ஸ்டக்கன்ப்ராக் பகுதியை சேர்ந்தவர் வொல்ப்காங் லாவன்பர்கர். இவர் பாலு எனும் நாயினை வளர்த்து வருகிறார். அதனுடன் ஸ்கிப்பிங் ஆட வேண்டும் என முடிவெடுத்த வொல்ப்காங் லாவன்பர்கர் அதற்காக பயிற்சியும் எடுத்து வந்திருக்கிறார். ஆனால், ஆரம்பத்தில் இந்த பயிற்சிகள் ஏதும் சரியாக அமையவில்லை. ஆனால், வொல்ப்காங் லாவன்பர்கர் விடுவதாக இல்லை.

இந்நிலையில் தொடர்ந்து வொல்ப்காங் மற்றும் அவருடைய நாய் பாலு சேர்ந்து ஸ்கிப்பிங் ஆட பயிற்சி பெற்று வந்திருக்கின்றனர். இந்நிலையில், 30 வினாடிகளில் 32 முறை ஸ்கிப்பிங் செய்து இருவரும் சாதனை படைத்திருக்கின்றனர். இதுவரையில் இத்தனை குறைவான நேரத்தில் இவ்வளவு முறை யாரும் ஸ்கிப்பிங் செய்தது இல்லையாம். இதனையடுத்து கடந்த ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி இந்த சாதனையை கின்னஸ் நிர்வாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.

இதனிடையே, கின்னஸ் நிர்வாகம் பாலு மற்றும் அதன் உரிமையாளர் வொல்ப்காங் லாவன்பர்கர் ஆகிய இருவரும் ஸ்கிப்பிங் ஆடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோவை இதுவரையில் 30 லட்சம் பேர் பார்த்துள்ளனர். மேலும், 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவினை லைக் செய்திருக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் அந்த நாய் மற்றும் அதன் உரிமையாளரை பாராட்டி வருகின்றனர்.

Also Read | கிரவுண்ட்ல பாண்டியாவை முறைத்த விராட் கோலி.. டக்குன்னு பாண்டியா செஞ்ச காரியம்..!

DOG, WORLD RECORD, SKIPPING, PET DOG

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்