VIDEO: 'மிஸ்டர் 'டாக்'... எங்க போறீங்க?'... 'என் ஓனருக்கு சாப்பாடு எடுத்துட்டு போறேன்!'... உரிமையாளருக்கு உணவு எடுத்துச் செல்லும் நாய்!... வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தனது உரிமையாளருக்கு தினமும் வீட்டிலிருந்து உணவு எடுத்துவரும் செல்ல நாயின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

VIDEO: 'மிஸ்டர் 'டாக்'... எங்க போறீங்க?'... 'என் ஓனருக்கு சாப்பாடு எடுத்துட்டு போறேன்!'... உரிமையாளருக்கு உணவு எடுத்துச் செல்லும் நாய்!... வைரல் வீடியோ!

சீனாவில், ஸியோ ஸியோ எனும் நபர் வுகான் நகரத்தில் பார்சல் சர்வீஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அன்றாடம் தனது வாடிக்கையாளர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவது, அவற்றை அவர்களுக்கு டெலிவரி தருவது என தனி ஆளாக இயங்கி வரும் ஸியோவுக்கு வீட்டிற்குச் சென்று உணவருந்த முடிவதில்லை.

எனவே, நான்காவது தளத்தில் இருக்கும் அவரது வீட்டில் இருந்து ஸியோவுக்கு உணவை எடுத்துக் கொண்டு வரும் அவரது செல்ல நாய், அவர் உண்டு முடித்ததும், பாத்திரங்களைத் திரும்ப வீட்டிற்கு எடுத்துச் சென்று விடுகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

 

 

DOG, OWNER, CHINA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்