பனிப்புதைவில் இருந்து நீட்டிக் கொண்டிருந்த மனித கைகள்!.. விசுவாசமான நாயின் ‘சமயோஜிதத்தால்’ நடந்த ‘நெகிழ்ச்சி’ சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வளர்ப்பு பிராணிகள் அபரிமிதமானது என்று சொன்னால் அதற்கு முதன்மையான இடம் நாய்களுக்கு உண்டு.

நாய்களின் உண்மைத் தன்மையும் அவற்றின் நன்றியும் அளப்பரியது என்பதை நிரூபிக்கும் சம்பவமொன்று சுவிட்சர்லாந்தில் நடந்துள்ளது. தென்மேற்கு சுவிட்சர்லாந்தில் இத்தாலியில் நடந்து கொண்டிருந்த சிலர் நாய் ஒன்று, விடாமல் குரைக்கும் சத்தத்தை கவனித்துள்ளனர். நாயின் சத்தம் அவர்களின் கவனத்தை ஈர்த்ததை அடுத்து சத்தம் போடும் நாயை நோக்கி சென்றுள்ளார்கள்.

ஆளில்லாத இடத்தில் மிகவும் பதட்டமாக அதேசமயம் ஒரு வித தவிப்புடன் குரைத்துக் கொண்டிருந்த அந்த நாய் இருக்கும் இடத்தின் அருகே அதைக் கண்டவர்கள் சென்றிருந்தனர். அப்போதுதான் அங்கு இரண்டு கைகள் பனியிலிருந்து நீட்டிக் கொண்டிருப்பதை அவர்கள் கண்டனர். அதை கண்டதும் வேகவேகமாக அந்த இடத்தை தோண்டி இருக்கிறார்கள்.

அப்போதுதான் இரண்டு பேர் அந்த பனிக்குள் புதைந்து கொண்டு இருப்பதை கண்டுள்ளனர். இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டிருந்த நிலையில் குளிரால் இருவருக்கும்  hypothermia என்கிற பிரச்சினை ஏற்பட்டு தவித்து வந்துள்ளனர். இதைக் கண்ட சிலர், பத்திரமாக இருவரையும் மீட்டு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

ALSO READ: “இந்த மனுசன் கிட்ட வீரர்கள் எல்லாம் பயப்படுறாய்ங்க!”.. “அவர் கேப்டன்சியில கூலா இருக்காங்க!”.. இந்திய அணி கேப்டன்சி பற்றி ஆஸி வீரரின் ‘அதிரடி’ கருத்து!

தனது செயலால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த எஜமானர்கள் இருவரையும் மீட்க உதவிய வளர்ப்பு நாய்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்