'செய்தித்தாள்கள்' மூலம் 'கொரோனா' பரவுமா?... 'மருத்துவர்கள்' கூறுவது 'என்ன?...' 'உலக' சுகாதார அமைப்பு 'விளக்கம்'...
முகப்பு > செய்திகள் > உலகம்செய்தித் தாள்கள் மூலம் கொரோனா பரவுமா? என்பதுகுறித்து உலக சுகாதார அமைப்பு விளக்கமளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அனைத்து விதமான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. மருத்துவர்களும், சுகாதார அதிகாரிகளும், எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது குறித்து பல்வேறு விளக்கங்களை அளித்து வருகின்றனர். உலக சுகாதார அமைப்பும் பொதுமக்கள் எவ்வாறு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பது குறித்து பல்வேறு முன்னெச்சரிக்கை விளக்கங்களை கூறி வருகிறது.
இதனிடையே செய்தித்தாள், ரூபாய் நோட்டுகள், உணவுப் பொருட்களைப் பேக்கேஜ் செய்து வரும் அட்டைகள் ஆகியவற்றின் மூலம் வைரஸ் தொற்று ஏற்படுமா? என்ற சந்தேகம் பலருக்கும் நிலவுகிறது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள உலக சுகாதார அமைப்பு, பல்வேறு சூழ்நிலைகள், தட்ப வெப்ப நிலைகளில் எடுத்து வரப்படும் பொருள்கள் மூலம் கொரோனா பரவ குறைவான சாத்தியமே உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
அதேநேரத்தில் இந்திய மருத்துவ சங்க முன்னாள் தலைவரான கே.கே. அகர்வால், செய்திதாள்களும், மற்ற பொருள்கள் போன்றதுதான் என்றும், ஆதலால் செய்திதாள்களை வாசிக்கும் முன்பும், வாசித்த பிறகும் கைகளை சுத்தம் செய்வது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் வைராலஜி பேராசிரியர் டி.ஜேக்கப்ஜான் .‘தி பிரிண்ட்’ என்ற இணைய இதழுக்கு அளித்த நேர்காணலில், செய்தித் தாள்கள் வழியாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வைரஸ் பரவுவதற்கான சாத்தியம் மிக மிகக் குறைவு எனத் தெரிவித்துள்ளார்.
செய்தித்தாளை விநியோகிக்கும் நபருக்கு கரோனா வைரஸ் தொற்று இருந்தாலோ, அவர் விநியோகம் செய்யும் செய்தித்தாளின் மீது தும்மவோ அல்லது இருமவோ செய்திருந்தாலோ மட்டும்தான் வைரஸ் பரவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், இதற்கான சாத்தியம் மிகக் குறைவு எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'டாக்டர் மாப்பிள்ளைதான்' வேணும்னு 'சொன்னவங்க' எல்லாம்... இப்போ 'வீட்டை' காலி பண்ண 'சொல்றாங்க'... 'இது ரொம்ப தவறுங்க'... 'கண்டித்த மத்திய அமைச்சர்'...
- 'வெளிநாட்டுல' இருந்து 'காப்பாத்துங்கன்னு' சொன்னவங்க எல்லாம்... இப்போ 'ஊட்டிக்கு டூர்' வந்த மாதிரி 'சுத்துறாங்க'... 'பொறுத்து பொறுத்துப்' பார்த்த 'போலீஸ்' செய்த 'காரியம்'...
- "இங்கேயே சாப்பிடுங்க.... இங்கேயே தூங்குங்க..." "இனிமே ஹாஸ்பிட்டல் தான் உங்க வீடு..." 'டாக்டர்கள்' வீட்டுக்குச் செல்ல 'தடை...'
- 'ஹை பிரசர், சுகர், கிட்னி டிஸ்ஆர்டர், ஹார்ட் பிராப்ளம்...' "மருந்து எடுத்துக் கொள்பவர்கள் ஜாக்கிரதை..." இவர்களை 'கொரோனா' எளிதில் 'தாக்கும்'... 'ஆய்வில் அதிர்ச்சித் தகவல்...'
- எனக்கு இப்போ 'டீ' குடிக்கணும்...! 'டீயை தாமதமாக கொண்டு சென்ற நர்ஸ்...' விரக்தியில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் செய்த காரியம்...!
- "அடங்கவில்லை என்றால் துப்பாக்கிச் சூடு தான்..." "வேற வழியில்லை..." "பெட்ரோல் பங்கையும் மூடிருவோம்..." 'எச்சரிக்கை' விடுத்த 'முதலமைச்சர்' யார் 'தெரியுமா?...'
- கொரோனாவின் மையப்பகுதியாக மாறும் அபாயம்!... 'அமெரிக்காவை கடுமையாக எச்சரித்த உலக சுகாதார அமைப்பு!'... 45,000 பேருக்கு தொற்று!
- 'ஆம்புலன்ஸ்' மூலம் 'கோவைக்குள்' நுழையும் 'மக்கள்'... 'தங்களைத்' தாங்களே 'கடத்திக்' கொள்ளும் 'விநோதம்..'. "லாக் டவுனுக்கு மரியாதையே இல்லை..." 'திணறும்' அதிகாரிகள்...
- "ஹன்டா வைரஸ் என்றால் என்ன?" அதுவும் 'கொரோனாவை' போல் 'பரவக்கூடியதா?...' அதன் 'அறிகுறிகள்' என்ன?... 'முழுமையானத் தகவல்...'
- 'கொரோனா' குறித்து 'தவறான' தகவல்களும், 'புரளிகளும்'... 'அறியாமையும்', அறிந்து கொள்ள வேண்டியதும்... 'முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள்...'