திடீரென சுருண்டு விழுந்த செல்ல நாய்.. பதறிய உரிமையாளர்.. X-ray பாத்து அதிர்ந்த டாக்டர்கள்.. !

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உடல்நிலை மோசமான நாயை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்ற உரிமையாளருக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது நாயின் எக்ஸ்ரே முடிவுகள்.

Advertising
>
Advertising

Also Read | லாட்டரியில் ஜெயிப்பது எப்படி?.. 20 வருஷமா ஆராய்ச்சி செய்த தாத்தா.. இந்த நம்பருக்கு தான் ஜாக்பாட்-ன்னு சொல்லி அடிச்சிருக்காரு..!

எக்ஸ்ரே

இங்கிலாந்தின் லான்காஸ்டரைச் சேர்ந்தவர் ஜெசிகா டியூஹர்ஸ்ட். இவர் தனது கணவர் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். தன்னுடைய வீட்டில் border collie எனும் இனத்தை சேர்ந்த நாய் ஒன்றை வளர்த்து வருகிறார் ஜெஸிகா. சமீபத்தில் ஒருநாள் நள்ளிரவில் ஜெஸிகாவின் நாய் மூச்சுவிட சிரமப்பட்டிருக்கிறது. இதனை அறிந்த அவர் உடனடியாக அருகில் இருந்த கால்நடை மருத்துவமனைக்கு தனது நாயினை அழைத்துச் சென்றிருக்கிறார்.

நாயின் நிலையை அறிந்த மருத்துவர் லாரன் ஜாலி மற்றும் செவிலியர் லீன் பாய்ட் உடனடியாக நாய்க்கு எக்ஸ்ரே எடுக்க முடிவெடுத்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து எக்ஸ்ரேவும் எடுக்கப்பட்டிருக்கிறது. அப்போது, வயது முதிர்வு காரணமாக நாயின் மார்பில் கட்டிகள் தோன்றியிருக்கலாம் என மருத்துவர் லாரன் நினைத்திருக்கிறார். ஆனால், எக்ஸ்ரே முடிவு அவரையே அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.

அதிர்ச்சி

ஜெஸிகாவின் மார்பில் கட்டிகள் இல்லை என்பது தெளிவான நிலையில், நாயின் தொண்டை பகுதியில் எதோ சிக்கியிருப்பது மருத்துவருக்கு தெரிய வந்திருக்கிறது. தொடர்ந்து கண்காணித்ததில் நாயின் தொண்டைக்குள் இரண்டு சாக்ஸ் இருப்பதை மருத்துவர் கண்டுபிடித்திருக்கிறார். இதுகுறித்து பேசிய லாரன்,"முதலில் நாயின் மார்பில் கட்டிகள் ஏற்பட்டிருக்கலாம் என நினைத்தேன். ஆனால், அதன் தொண்டையில் சாக்ஸ் இருப்பதை பார்த்து நான் அதிர்ந்துபோனேன். உடனடியாக அது வெளியே எடுக்கப்பட்டது. சரியான நேரத்தில் அதனை வெளியே எடுக்க முடியாமல் போயிருந்தால் உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும்" என்றார்.

இதுபற்றி பேசிய ஜெஸிகா,"எங்களுடைய நாயை காரில் ஏற்றும்போது அதன் உடல்நிலை மிகவும் மோசமடைந்துவிட்டது. நான் மிகவும் கவலையானேன். என்னுடைய இறுதி குட்பை-யை சொன்னேன். ஆனால் மருத்துவர்கள் அதன் உயிரை காப்பாற்றிவிட்டனர். வழக்கமாக சாக்ஸ் மற்றும் ஷூ-வை அது கடித்து மெல்லும். அதனை அது விழுங்கியதே இத்தனை சிரமத்திற்கு காரணமாக அமைந்திருக்கிறது. இனி மிகுந்த ஜாக்கிரதையாக நடந்துகொள்வேன்" என்றார்.

Also Read | படிச்சு முன்னேற காரணமா இருந்த அரசு கல்லூரிக்கு மொத்த சொத்தையும் எழுதி வச்ச டாக்டர்.. நெகிழ வைக்கும் பின்னணி..!

DOG, DOCTORS, DOG XRAY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்