'வலியால் துடித்த கர்ப்பிணி'... 'குழந்தையை பார்த்ததும் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி'... மனித வரலாற்றிலேயே இது தான் முதல் முறை!
முகப்பு > செய்திகள் > உலகம்சில விஷயங்கள் மனிதனின் கற்பனைக்கு அப்பாற்பட்டு நடக்கும். அப்படி நடக்கும் சம்பவங்கள் அறிவியல் மற்றும் மருத்துவ உலகிற்கே பெரும் ஆச்சரியத்தை அளிக்கும். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது.
வடக்கு ஈராக்கின் மொசூல் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பிரசவத்திற்காக இளம்பெண் ஒருவரை அவரது கணவர் சேர்த்துள்ளார். இதையடுத்து அவருக்குப் பிரசவ வலி ஏற்படவே அந்த பெண்ணை பிரசவ அறைக்கு மருத்துவர்கள் கொண்டு சென்றுள்ளார்கள். அங்கு அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது குழந்தையைப் பார்த்த மருத்துவர்களுக்குப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
பிறந்த அந்த பச்சிளம் குழந்தைக்கு 3 ஆண் பிறப்புறுப்பு இருந்தது. இதனால் ஆச்சரியம் அடைந்த மருத்துவர்கள், மனித வரலாற்றில் 3 பிறப்புறுப்புடன் இதுவரை எந்த குழந்தையும் பிறந்ததாகப் பதிவாகவில்லை எனத் தெரிவித்தார்கள். இதனை மருத்துவத்துறையில் 'TRIPHALLIA' என மருத்துவர்கள் அழைக்கிறார்கள். பிறக்கும் 6 மில்லியன் குழந்தைகளில் ஒரே ஒரு குழந்தை மட்டும் 2 பிறப்புறுப்புகளுடன் பிறக்கும்.
ஆனால் முதல் முறையாக 3 பிறப்புறுப்புகளுடன் ஒரு குழந்தை தற்போது பிறந்துள்ளது. இதற்கிடையே அந்த குழந்தையின் 3 பிறப்புறுப்பில் ஒன்று மட்டுமே செயல்பட்டது. மற்ற இரண்டால் அந்த குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதால் அதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
அதனடிப்படையில் மற்ற 2 பிறப்புறுப்புகளும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக, மருத்துவமனை தலைவர் மருத்துவர் சலீம் ஜபாலி தெரிவித்துள்ளார். அறிவியல் உலகில் இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் அபூர்வமானவை. கோடிகளில் எப்போதாவது ஒரு முறை மட்டுமே நடக்கும் இதுபோன்ற சம்பவத்தை மக்களிடையே பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த செய்தியானது வெளியிடப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்