'எங்க வந்து டேரா போடுற?'... 'சிலந்தி'யால் இளைஞர் பட்ட அவஸ்தை!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

காது வலிப்பதாக மருத்துவமனை வந்த நோயாளியின் காதுக்குள், உயிருடன் கூடுகட்டி கொண்டிருந்த சிலந்தி பூச்சியை கண்டு, மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தை சேர்ந்த லீ என்ற 20 வயது இளைஞர், அண்மையில் யாங்க்சோவில் உள்ள மருத்துவமனைக்கு சென்று, மருத்துவரை சந்தித்துள்ளார். தனது காதின் உள்பகுதி பயங்கரமாக வலிப்பதாக தெரிவித்த அவர், காதுக்குள் ஏதோ ஊர்ந்து, அரிப்பு ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து மைக்ரோஸ்கோப் கருவி மூலம், லீயின் காதுகளை மருத்துவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது சிலந்தி ஒன்று காதின் உட்புற பகுதியில் கூடு கட்டிக்கொண்டு உயிருடன் இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உரிய நேரத்தில் வந்ததால் செவிதிறன் பாதுகாக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் எளியமுறையில் உப்புகலந்த நீரை காதில் ஊற்றி வெற்றிகரமாக அதனை மருத்துவர்கள் வெளியேற்றினர். கடந்தாண்டு கர்நாடக மாநிலத்தில் 60 வயது மதிக்க தக்க ஒருவருக்கு கண்ணில் ஆப்ரேஷன் செய்த போது,  அதிலிருந்து சுமார் 15 செ.மீ நீளத்திற்கு புழு ஒன்று எடுக்கப்பட்டது. அந்த செய்தி அப்பொழுது வைரலாக பேசப்பட்டது. தற்போது அதே போன்ற ஒரு சம்பவம் சமீபத்தில் சீனாவில் நடந்துள்ளது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இளைஞரின் காதிற்குள் சிலந்து கூடுகட்டிய வீடியோ வெளியாக வைரலாகி வருகிறது.

SPIDER, YOUTH, CHINA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்