பாதுகாப்பு உபகரணங்கள் கேட்டு போராடிய மருத்துவர்கள் கைது..! பாகிஸ்தானில் பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > உலகம்பாகிஸ்தானில் பாதுகாப்பு உபகரணங்கள் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3277 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆகவும் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களில் மருத்துவர்களும் அடங்குவர். இதற்கு பாகிஸ்தான் அரசு மருத்துவர்களுக்கு முறையான முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததே காரணம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வலியுறுத்தி தென்மேற்கு பாகிஸ்தானின் குவெட்ட நகரில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவர்கள் பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை காவலர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், மருத்துவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் போலீசார் தடியடி நடத்தி மருத்துவர்களை கைது செய்தனர்.
இதுகுறித்து தெரிவித்த மருத்துவர் ஒருவர், ‘நாங்கள் சில வாரங்களாக எங்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் தருமாறு அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் அரசு நடவடிக்கை எடுக்காததால், எங்கள் உரிமைக்காக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'வெளிய பாத்தா பால் கேன்!'.. 'ஆனா உள்ள பாத்தா'... போலீஸாரை 'உறைய' வைத்த 'குடிமகனின்' வைரல் காரியம்!
- 'கொரோனா' தடுப்பூசி சோதனைகளை இவர்களிடம் நடத்த வேண்டும்.... 'வன்மையாகக் கண்டித்த WHO...' 'அனுமதிக்க மாட்டோம் என உறுதி...'
- கொரோனா சிகிச்சைக்கு பயன்படும்... 'Hydroxychloroquine' (ஹைட்ராக்சிகுளோரோகுயின்) மருந்தை... அமெரிக்காவுக்கு வழங்க இந்தியா முடிவு!
- ‘அவங்களும் மனுஷங்க தானே’!.. ‘மக்கள் மனசாட்சியோட நெனச்சு பாருங்க’.. முதல்வர் உருக்கமான வேண்டுகோள்..!
- ஒழுங்கா 'அமெரிக்காவுக்கு' மருந்த அனுப்பிருங்க... இல்லன்னா 'தக்க பதிலடி' கொடுக்கப்படும்... 'இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்...'
- 'சிக்கிக் கொண்ட கொரோனா!'... வைரஸின் 'வீக் பாயின்ட்' கண்டுபிடிக்கப்பட்டது!... அமெரிக்கா ஆய்வாளர்கள் அறிவிப்பு!
- மும்பை 'சிவப்பு விளக்கு' பகுதி 'பாலியல்' தொழிலாளர்களுக்கு... 'ஊரடங்கு உத்தரவால்' ஏற்பட்ட 'பரிதாப நிலை...' தனியார் 'தொண்டு நிறுவனத்தால்' பிழைத்திருக்கும் 'சோகம்...'
- 'காசு போனா திரும்ப வரும், உயிர் போனா'?...'மோடிஜி இத பண்ணுங்க'... சந்திரசேகர ராவ் அதிரடி!
- “நீங்க ஏன் இவங்களுக்கு லெட்டர் எழுதி அவங்க தோத்துட்டாங்கனு சுட்டிக்காட்டக் கூடாது? இது ஒரு ட்ரெண்ட் ஆயிடுச்சு!”.. கமலை காட்டமாக விமர்சித்த காயத்ரி ரகுராம்!
- 'எங்களுக்கு வருமானம் இல்லனாலும் பரவாயில்ல... வாத்தியார்களுக்கு சம்பளம் கொடுங்க!'... பதநீர் விற்று... பள்ளிக்கூடம் நடத்தும் கிராமம்!... மெய்சிலிர்க்கவைக்கும் நெகிழ்ச்சி சம்பவம்!