'Audi கார்ல எப்படி ஏர் பேக் வேலை செய்யாம போச்சு'?... 'சுக்குநூறாக தெறித்த கார்'... 'தி.மு.க. எம்.எல்.ஏ மகனுக்கு நேர்ந்த பரிதாபம்'... CCTV காட்சிகள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கார் விபத்தில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர். மகன் உள்பட 7 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆடி காரில் ஏர் பேக் வேலை செய்யாமல் போனதன் காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருபவர் பிரகாஷ். இவர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் இருந்து வருகிறார். இவரது மகன் கருணாசாகர். 24 வயது இளைஞரான இவர் தனது நண்பர்கள் 6 பேருடன் ஆடி காரில் பெங்களூருக்குப் புறப்பட்டுச் சென்றார்.

அப்போது இன்று அதிகாலை 2 மணியளவில் கோரமங்கலா என்ற இடத்தில் சென்றபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையின் மீது கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கருணாசாகர் மற்றும் அவரது நண்பர்கள் 6 பேரும் இடிபாட்டில் சிக்கி பரிதாபமாகச் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இந்த விபத்து ஆடு கோடி போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று பலியான 7 பேரின் உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். கருணாசாகருடன் பயணம் செய்த அவரது நண்பர்கள் 6 பேரின் பெயர் விவரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். மிகவும் விலை உயர்ந்த ஆடி காரில் கருணாசாகர் அதிவேகமாகச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அதேபோன்று காரில் பயணம் செய்த 7 பெரும் சீட் பெல்ட் அணியாமல் சென்றுள்ளார்கள். இதனால் விபத்து நடந்த நேரத்தில் காரில் இருந்த ஏர் பேக் வேலை செய்யாமல் போயுள்ளது. ஒரு வேளை 7 பெரும் சீட் பெல்ட் அணிந்திருந்தால் நிச்சயம் காயத்தோடு உயிர் பிழைத்திருக்கலாம் என போலீசார் கூறியுள்ளார்கள். விபத்து நடந்த நேரத்தில் அந்த பகுதியிலிருந்த சிசிடிவி கேமராவில் விபத்தின் காட்சிகள் பதிவாகியுள்ளது.

இதற்கிடையே காரில் சென்ற தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மகன் உள்பட 7 பேர் பலியான சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்