கடலின் 400 அடி ஆழத்தில் புதைந்து கிடந்த 100 வருச 'மர்மம்'.. "இத்தனை நாளா இது தெரியாம போயிருச்சே"
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தின் கடற்கரை பகுதியில் நீந்தும் வீரர்கள் கடலுக்கு அடியில் கண்டெடுத்துள்ள விஷயம், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
Also Read | உலக பணக்காரர்கள் பட்டியல்.. எந்த இந்தியரும் தொடாத இடத்தில் கவுதம் அதானி.. மிரள வைத்த தொழிலதிபர்!!
கடந்த 1914 ஆம் ஆண்டு முதல் 1918 வரை முதல் உலக போர் நடைபெற்றிருந்தது. அப்போது பல நாடுகள் மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டதால், அனைத்து இடங்களும் போர்க்களமாக மாறி இருந்தது.
அது மட்டுமில்லாமல், ஏராளமான ஆயுதங்கள், கப்பல்கள், வாகனங்கள் என பல விஷயங்கள் முதல் உலக போரில் பயன்படுத்தப்பட்டிருந்தது.
அப்படி ஒரு சூழ்நிலையில், சுமார் 105 ஆண்டுகள் கழித்து முதல் உலக போர் தொடர்பான விஷயம் தான், தற்போது கடல் நீருக்கு அடியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. US கடற்படை சார்பில் பயன்படுத்தப்பட்ட கப்பலான USS Jacob Jones, முதல் உலக போரின் போது, ஜெர்மன் படைகளால் கடலில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்போது, அந்த கப்பலில் இருந்த சுமார் 110 வீரர்களில், 46 பேர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், 8 நிமிடத்தில் அந்த கப்பல் நீர் மூழ்கி விடும் என்பதால், அதிலிருந்த பலரும் நீந்தி தப்பித்ததாக கூறப்படுகிறது. அதே போல அந்த கப்பலும் வேகமாக நீரில் மூழ்கியதால் இத்தனை ஆண்டுகளாக எங்கே இருந்தது என்பதே தெரியாமல் ஒரு மர்மமாக இருந்து வந்தது. அப்படி ஒரு சூழ்நிலையில், சுமார் 100 ஆண்டுகள் கழித்து, சுட்டு வீழ்த்தப்பட்ட கப்பலின் உடைந்த பகுதிகள் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தற்போது இதனை கண்டுபிடித்த நீந்தும் வீரர்கள், கடலுக்கு அடியில் சுமார் 400 அடியின் கீழ் இதனை கண்டெடுத்துள்ளனர். மேலும், சிதைந்து போன அந்த கப்பலில் இருந்து எந்த பொருட்களையும் அவர்கள் எடுக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
முதலில் ஒரு பெரிய மணியை நீந்தும் வீரர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் பின்னர், மூழ்கடிக்கப்பட்ட கப்பலில் இருந்த பல பகுதிகளை அவர்கள் அடையாளம் காணவே பின்னர் முதல் உலக போரில், எதிரிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட UK-வின் முதல் கப்பலான USS Jacob Jones தான் என்பது உறுதியானது.
கடந்த 105 ஆண்டுகளாக USS Jacob Jones கப்பல் குறித்து எந்த தகவலும் கிடைக்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது அதன் உடைந்த பகுதிகள், கடலுக்கு அடியில் சுமார் 400 அடி தொலைவில் கண்டெடுக்கப்பட்ட தகவல், நெட்டிசன்கள் பலரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
மற்ற செய்திகள்