ஒரு 'நகரமே' மண்ணுக்கடியில 'புதைஞ்சு' இருந்துருக்கு...' எப்படியெல்லாம் வாழ்ந்திருக்காங்க...! - வியப்பில் ஆழ்த்தும் 'தங்க' நகரம்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

எகிப்தின் 3000 ஆண்டுகள் பழமையான தங்க நகரம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

எகிப்தில் பிரமிடுகளே மிகவும் புகழ்பெற்றவையும் அறியப்பட்டவையும் ஆகும். செங்கல் அல்லது பாறைகளால் கட்டப்பட்ட இவற்றில் சில உலகின் மிகப்பெரிய கட்டிடங்களில் ஒன்றாக அமைந்தன.

பெரும்பாலான பிரமிடுகளின் மேற்பரப்புகள் வெள்ளைநிற சுண்ணக்கற்களால் மிகவும் எதிரொளிக்குமாறு தீட்டப்பட்டிருந்தன. இதனால் தொலைவிலிருந்து பளபளப்புடன் காணப்பட்டன. 2008ஆம் ஆண்டுப்படி, இதுவரை 135 பிரமிடுகள் எகிப்தில் கண்டறியப்பட்டுள்ளன.

மேலும் தற்போது எகிப்தத்தை சேர்ந்த தொல்லியல் துறை நிபுணர் ஸாஹி ஹவாஸ் என்பவர் மற்றும் எகிப்பித்தின் தொல்பொருள் ஆய்வு நிறுவனத்துடன் சேர்ந்து  தங்க நகரம் என்ற இடத்தை ஆய்வு நடத்தி வந்தனர்.

இந்த நகரமானது, ஏதெனின் எழுச்சி என்றும், இதனை மூன்றாம் அமென்ஹோடெப் மற்றும் மன்னர் துதன்கமுன் ஆகியோரது ஆண்டுள்ளனர் என்றும் குறிப்பிடுகின்றனர். இந்த நகரத்தின் அமைப்பு, கிடைத்திருக்கும் பொருட்களை பார்க்கும்போது மிகவும் நாகரிகமாக வாழ்ந்த சமூகமாக பார்க்கபடுகிறது. இது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக உள்ளது.

எகிப்து நாட்டின் லக்ஸர் பகுதியில் 3000 ஆண்டுகள் பழமையான இழந்த தங்க நகரம் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு ஏராளமான வெளிநாட்டுக் குழுக்கள் இந்தக் கோயிலை அகழ்வாராய்ச்சி செய்யும் பணியில் ஈடுபட்டன. ஆனால், அப்போதெல்லாம் இந்த நகரத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்