'ஆமா'!...'நான் நோயாளி கூட உறவு வச்சுக்கிட்டேன்'... 'அதுக்கு காரணம் இருக்கு'... மருத்துவர் தீபா பகீர்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சிகிச்சைக்கு வந்த நோயாளியுடன் உறவு வைத்துக் கொண்டதாக எழுந்த புகாரில், பெண் மருத்துவர் தனது தரப்பு நியாயத்தை தெரிவித்துள்ளார். இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் டொராண்டோ மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருபவர்  தீபா சுந்தரலிங்கம். புற்று நோய் மருத்துவரான இவர் மீது, சிகிச்சைக்கு வந்த நோயாளியுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கடந்த ஜனவரியில் அவரது மருத்துவர் உரிமம் பறிக்கப்பட்டது. புற்றுநோய் சிகிச்சையில் பிரபலமான மருத்துவரான தீபாவிடம் கடந்த 2015ஆம் ஆண்டு நோயாளி ஒருவர் சிகிச்சை பெற வந்தார்.

அவ்வப்போது மருத்துவ பரிசோதனைக்கு வந்த அந்த நோயாளியுடன் தீபாவிற்கு நல்ல பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் நெருக்கமாக இருவரும் வெளியில் செல்ல ஆரம்பித்தார்கள். இருவரின் உறவும் நெருக்கமாக இருந்த நிலையில் கடந்த 2015ஆம் ஜனவரி முதல் 2016 மார்ச் வரை 23 முறை அந்த நோயாளிக்கு தீபா சிகிச்சை அளித்தார்.

இந்நிலையில் திடீரென தான் சிகிச்சை அளிக்கும் நோயாளிகள் பட்டியலில் இருந்து, அவரின் பெயரை தீபா நீக்கினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நோயாளி 'மருத்துவர் தீபா, தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தி கொண்டதாகவும், சிகிச்சைக்கு வந்த போது தன்னுடன் உறவு கொண்டார் என்றும் நோயாளி அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை அடுக்கினார். இது மருத்துவ வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தன்னுடைய புகாரினை சிபிஎஸ்ஓ'யில் (College of Physicians and Surgeons) அளித்த அந்த நோயாளி 'அவருடைய இழப்பு என்னை உணர்வுப்பூர்வமாக பாதித்துள்ளது எனவும், தீபா என்னை விட்டு பிரிந்ததோடு எனக்கு சிகிச்சை அளிக்கவும் மறுத்து விட்டதாகவும் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்திருந்தார். இதையடுத்து நடைபெற்ற விசாரணையின் போது மருத்துவர் தீபா எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தார். இதனைத்தொடர்ந்து குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தீபாவின் மருத்துவ உரிமம் ரத்து செய்யப்பட்டதோடு அபராதமும் விதிக்கப்பட்டது.

இதனிடையே ஆறு மாதங்கள் கழித்து தனது தரப்பு நியாயத்தை நீதிமன்றத்தில் மருத்துவர் தீபா முன்வைத்துள்ளார். அதில் ''நடந்த சம்பவத்தில் நான் குற்றவாளி இல்லை எனவும்,பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நோயாளி தான் குற்றவாளி எனவும் கூறியுள்ளார். மேலும் அவர் என்னை உணர்வு பூர்வமாக கட்டுப்படுத்தி வைத்துக்கொண்டு தனது தேவைக்கு பயன்படுத்தி கொண்டதாக பரபரப்பு குற்றசாட்டை தெரிவித்துள்ளார்.

ஆபாச போட்டோக்களை அனுப்ப சொல்லி மிரட்டிய அவர், தன்னுடன் உறவு வைத்துக் கொள்ளாவிட்டால் நான் அனுப்பிய எஸ்எம்எஸ் மற்றும் படங்களை மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்பி விடுவதாக மிரட்டியதாக தீபா குறிப்பிட்டுள்ளார். மேலும் அவமானத்தால் கூனி குறுகி நின்றதால் அன்று என்னால் பேச முடியவில்லை, எனவே நீதிமன்றம் எனது தரப்பு நியாயத்தை கேட்க வேண்டும் என தீபா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையே இதுவரை நோயாளி தரப்பு நியாயத்தை மட்டும் கேட்ட நீதிமன்றம், தற்போது தீபா தரப்பு நியாயத்தையும் கேட்க வேண்டும் என, அவருக்கு ஆதரவாக பல்வேறு மருத்துவர்களும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

SEXUALABUSE, DISCIPLINARY ACTION, DOCTOR, THEEPA SUNDARALINGAM, COLLEGE OF PHYSICIANS AND SURGEONS, CANCER SPECIALIST, ONCOLOGIST

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்