இலங்கையின் புதிய பிரதமர் ஆனார் ராஜபக்சே கட்சியை சேர்ந்த தினேஷ் குணவர்த்தன.. முழு விபரம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இலங்கையின் புதிய பிரதமராக ராஜபக்சே கட்சியை சேர்ந்த தினேஷ் குணவர்த்தன தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | "என்ன மண்ட ஒரு மார்க்கமா இருக்கு".. ஏர்போர்ட்ல சிக்கிய 3 பேர்.. தலையில இருந்து உருவப்பட்ட லட்சக்கணக்கான பணம்.. வைரல் வீடியோ..!

இலங்கை போராட்டம்

கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்துவந்த இலங்கையில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் கடந்த வாரம் தடையை மீறி நுழைந்தனர். மேலும், மாளிகையில் இருக்கும் அறைகள் மற்றும் நீச்சல் குளங்களை போராட்டக்காரர்கள் பயன்படுத்தும் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வந்தன. அதிபர் மற்றும் பிரதமர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது என போராட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே பதவி விலகுவதாக அறிவித்திருந்த கோத்தபய, திடீரென தனது மனைவி மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் மாலத்தீவுகளுக்கு தப்பிச் சென்றார். இதனால் பொறுப்பு அதிபராக ரணில் விக்ரமசிங்கே-வை நியமித்திருந்தார் கோத்தபய. அதைத் தொடர்ந்து சிங்கப்பூருக்கு தப்பிச்சென்ற கோத்தபய தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ரணில் விக்ரமசிங்கே

இதைத்தொடர்ந்து இலங்கையின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் சில தினங்களுக்கு முன்னர் இலங்கையின் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் ரணில் விக்ரமசிங்கே 134 வாக்குகளை பெற்று பெரும்பான்மையுடன் இலங்கையின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து இலங்கையின் அடுத்த பிரதமர் யார்? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் தினேஷ் குணவர்தனவை இலங்கையின் புதிய பிரதமராக தேர்ந்தெடுத்திருக்கிறார் ரணில். இந்நிலையில், இன்று தினேஷ் குணவர்தன இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.

ராஜபக்சே குடும்பத்துக்கு நெருக்கமானவராக கருதப்படும் தினேஷ் குணவர்த்தன இதற்கு முன்னரும் கேபினட் அமைச்சரவையில் இருந்தவர். 1970 களில் அரசியலுக்கு வந்த இவர் வெளியுறவு அமைச்சராகவும், போக்குவரத்து அமைச்சராகவும், நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | பிரிட்டன் பிரதமர் பதவிக்கான தேர்தல்.. கரெக்ட்-ஆன Time ல ஆனந்த் மஹிந்திரா ஷேர் செஞ்ச மீம்.. வைரல் ட்வீட்..!

SRILANKA, DINESH GUNAWARDENA, SRI LANKA PRIME MINISTER, SRI LANKA PRIME MINISTER DINESH GUNAWARDENA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்