‘பைசர் கொரோனா தடுப்பு மருந்துக்கு’... ‘எழுந்துள்ள புதிய சிக்கல்’... ‘90% பயன் இருந்தும்’... ‘விழிபிதுங்கி நிற்கும்’... ‘இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள்’...!!!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் பைசர் கொரோனா தடுப்பூசிக்கு, இந்தியா உள்பட ஆசிய கண்டத்தில் புதிய சிக்கல் ஒன்று எழுந்து உள்ளது.
அமெரிக்காவின் பைசர் (Pfizer) நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பு மருந்து தற்போது புதிய சிக்கலை எதிர்கொண்டுள்ளது. அதாவது, பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தானது, நோயாளிகளில் 90 சதவீதம் வரை பலன் அளிக்கிறது என்றும், பக்கவிளைவுகள் அற்றது எனவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டது.
இதனையடுத்து பல நாடுகள் தங்கள் கோடிக்கணக்கான பைசர் டோஸ்களுக்கு ஒப்பந்தங்களும் மேற்கொள்ள ஆயத்தமாகியிருந்தன. இந்த நிலையில் தற்போது இதில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த பைசர் தடுப்பு மருந்தை மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு கீழே வைத்து தான் பயன்படுத்த முடியும் என அதன் கண்டுபிடிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வெப்ப நிலையில் மட்டுமே கொரோனா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்புத் திறனை இந்த தடுப்பூசி உருவாக்கும். இல்லையெனில் இந்த தடுப்பு மருந்து செயலற்றதாகிவிடும். இந்தியாவில் குளிர் காலத்தில் இந்திய - சீன எல்லையில் தான் வெப்ப நிலை மைனஸ் 30 டிகிரி செல்சியஸுக்கு போகும் என இந்திய மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 400 கோடி மக்கள் ஆசிய கண்டத்தில் வாழ்கின்றனர். அதாவது உலக மக்கள் தொகையில் ஐந்தில் மூன்று பங்கு மக்கள் தொகை ஆசியாவிலேயே உள்ளது. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் வெப்ப மண்டலங்களாக காணப்படுகின்றன. மேலை நாடுகளில் குளிர் நிலவுவதால் அங்கு இவற்றை பாதுகாப்பது மிக எளிது. ஆனால் வெப்ப மண்டலங்களில் இந்த தடுப்பு மருந்துகளை எடுத்துச் செல்வது மிகக் கடினம்.
இதனால் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தை ஆசிய நாடுகள் விலை கொடுத்து வாங்கினாலும் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும், இதனைக் கொண்டுசேர்ப்பது, மேலும் பாதுகாப்பது கடினமான ஒன்று என நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கினறனர். இந்த விவகாரம் தற்போது பைசர் நிறுவனத்துக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.
மிகவும் நவீனமான அமெரிக்க மருத்துவமனைகளிலேயே இதை பயன்படுத்துவது சவாலான செயல் என்றும் அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்பை 90 சதவிகிதம் தடுத்தாலும் இந்த நடைமுறைச் சிக்கலால் இந்தியாவுக்கும் மற்ற ஏழை நாடுகளுக்கும் பயன்படாது. இந்த நிபந்தனையை கவனிக்காமல் அந்த தடுப்பூசியை பயன்படுத்த போட்டி போட்ட நாடுகள் தற்போது விழிபிதுங்கி நிற்கின்றன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தமிழகத்தின் இன்றைய (11-11-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!
- “தேர்தலே முடிஞ்சுருச்சு.. ஆனா இது இன்னும் முடியல!”.. ‘திரும்பவும்’ அட்டூழியம் செய்யும் கொரோனா.. ‘அல்லல் படும்’ அமெரிக்கா! அப்படி என்ன நடந்தது?
- “சாதி பெயரை ஏன் நீக்கணும்? மாட்டேன்.. அது என் அடையாளம்.. வரலாறு” - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசின் முக்கிய பொறுப்பில் உள்ள தமிழக பெண் ‘பரபரப்பு’ பதில்!
- ‘ரசிகர்களுக்கு குட் நியூஸ்’... ‘இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியை காண’... ‘ஆனா, ஒரு கண்டிஷன்’... ‘வெளியான அறிவிப்பு’...!!!
- 'கொரோனாவுல இருந்து மீண்டு வந்தவங்க... இனிமே தான் கவனமா இருக்கணும்'... உலகப் புகழ் பெற்ற 'தி லான்சட்' மருத்துவ இதழில்... வெளியான அதிர்ச்சி தகவல்!
- 'தமிழகத்தின் இன்றைய (10-11-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!
- 'ஓஹோ... கதை அப்படி போகுதா?'.. 'பெரிய சதி திட்டம் தீட்டி... என்னை தோற்கடிச்சுட்டாங்க!'.. திடீரென வெளியான தகவல்!.. டிரம்ப் கருத்தால்... அமெரிக்காவில் பரபரப்பு!
- 'விரைவில் விடிவு காலம் பிறக்கும்'...'கிட்டத்தட்ட நெருங்கிவிட்டோம்'... உலகையே திரும்பி பார்க்க வைத்த தம்பதி!
- ‘கொரோனா வைரஸால்’... ‘நாம வேணா சோர்வாகி இருக்கலாம்’... ‘ஆனா, அது’... ‘வறுமை, பசிக்கு எல்லாம்’... 'உலக சுகாதார நிறுவனத் தலைவர் வேதனை’...!!!
- ‘வாழ்த்துக்கள் நட்டு’...!!! 'உங்கள அங்க மீட் பண்றேன்’...!!! 'தமிழக வீரரை பாராட்டிய ஆஸ்திரேலிய வீரர்...!!!’