‘நான் உங்களை நேசிக்கிறேன்’... ‘இறுதியாக’ விரும்பியதை ‘போனில்’ கேட்டு மகிழ்ந்ததும்... ‘10 நிமிடங்களில்’ பிரிந்த உயிர்... ‘கலங்கவைக்கும்’ சம்பவம்...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒருவருக்கு போன் வழியாக பாதிரியார் இறுதி மதபோதனை செய்துள்ளார்.

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தைச் சேர்ந்த பில் பைக் என்பவர் சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதும் அவருடைய குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பெற்றுவந்த மைக்கின் உடல்நிலை மோசமானதை அடுத்து அவர் இறுதியாக மதபோதனையைக் கேட்க வேண்டுமென விரும்பியுள்ளார்.

இதையடுத்து அவரைக் கவனித்து வந்த செவிலியர் பாதிரியாரை போனில் அழைத்துள்ளார். பாதிரியாரும் போனிலேயே மதபோதனை செய்ய, அதைக் கேட்டு மகிழ்ந்த மைக் அதன்பிறகு 10 நிமிடங்களிலேயே உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்துப் பேசியுள்ள பாதிரியார், “அவரிடம் நான் உங்களை நேசிக்கிறேன் என இறுதியாக கூறினேன். இதுதான் முதல்முறையாக நான் போன் வழியாக அளித்த இறுதி மதபோதனை. கொரோனா வைரஸின் பாதிப்புகள் அபாயகரமாக உள்ளபோதும் சில விஷயங்கள் வியக்கத்தக்க வகையில் நம்பிக்கை அளிக்கின்றன'' எனத் தெரிவித்துள்ளார்.

CORONAVIRUS, US, PRAYER, PHONE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்