"அட, இங்கயே தான் இருந்திருக்கா?".. 21 வருஷம் முன்னாடி காணாம போன வைர மோதிரம்.. "அது இருந்த இடம் தான் ஹைலைட்டே"

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவின் புளோரிடா பகுதியை சேர்ந்தவர் நிக் டே. இவருக்கு கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்ததாக தகவல்கள் கூறுகின்றது.

Advertising
>
Advertising

மேலும் நிக் டேவின் திருமணத்திற்கு முன்பாக அவரது நிச்சயதார்த்தத்தின் போது தனது காதலி மற்றும் வருங்கால மனைவிக்காக ஆசை ஆசையாக வைர மோதிரம் ஒன்றை அவர் வாங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கடுத்து திட்டமிட்ட படி, நிக் டே மற்றும் அவரது மனைவி ஷைனா இடையே நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்துள்ளது. அப்போது வைர மோதிரத்தை மனைவி கையில் நிக் டே போட்டிருந்த சூழலில், ஒன்றிரன்டு நாட்கள் கழித்து கடும் அதிர்ச்சி ஒன்றும் காத்திருந்துள்ளது.

நிக் டேவின் மனைவியான ஷைனா அணிந்திருந்த வைர மோதிரம் வீட்டின் டாய்லெட்டில் விழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அதனை மீட்டெடுக்க ஷைனா முயன்ற போதும் அது முடியாமல் போனதாக தெரிகிறது. இதற்கடுத்து நிக் டேவிட்டிடம் மோதிரம் தொலைந்து போனது பற்றி ஷைனா விவரங்களை கூறி உள்ளார்.

இது தொடர்பாக அவர்களுக்கு இடையே சிறிதாக சண்டையும் உருவானதையடுத்து மோதிரத்தை எப்படி மீட்கலாம் என்ற ஆலோசனையில் நிக் டே மற்றும் ஷைனா ஆகியோர் இறங்கி உள்ளனர். முதலாவதாக டாய்லெட்டில் இருந்து செப்டிக் டேங்கை இணைக்கும் பைப்பை தனியாக பிரித்து எடுத்து சோதனை செய்தும் அதில் கிடைக்கவில்லை என தகவல்கள் கூறுகின்றது.

இதனைத் தொடர்ந்து செப்டிக் டேங்க்கை சுத்தப்படுத்தும் லாரியை வரவைத்து செப்டிக் டேங்க் கழிவுகளை உறிஞ்சு எடுத்து தேடிப் பார்த்தும் வைர மோதிரம் கிடைக்கவில்லை என தகவல்கள் கூறுகின்றது. இதன் பின்னர் மோதிரத்தை தேடும் முயற்சியையும் நிக் டே மற்றும் ஷைனா ஆகியோர் கைவிட்டுள்ள நிலையில் சுமார் 21 வருடங்களும் ஓடி உள்ளது.

அப்படி ஒரு சூழலில் சமீபத்தில் தனது பெற்றோரை அந்த வீட்டில் குடி வைத்து விட்டு மனைவி ஷைனாவுடன் இணைந்து வேறு ஒரு வீட்டிற்கும் நிக் சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தன்னுடைய பழைய வீட்டில் நிக்கின் தாய் சில நாட்களுக்கு முன்னர் டாய்லெட்டில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளது இருந்ததை அறிந்து பிளம்பர் ஒருவரை அழைத்துள்ளார். அவர் பழைய பைப்புகள் அனைத்தையும் எடுத்து புதிய பைப்புகளை மாற்றிக் கொண்டிருக்கும் போது அவருடைய கைக்கு மோதிரம் ஒன்று கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதை எடுத்துக் கொண்டு போய் நிக்கின் அம்மாவிடம் அவர் காட்ட முதலில் அவர் தன்னுடைய மோதிரம் கிடையாது என மறுத்துள்ளார். அப்படி இருக்கையில், நிக்கிடம் அழைத்து கேட்ட போது 21 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்த தன்னுடைய மனைவிக்கு அணிவித்த வைர மோதிரம் என்பதும் தெரிய வந்துள்ளது. இதன் பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்து தனது மனைவிக்கு அளித்த வைர மோதிரம் என்பது உறுதியானதும் அதிர்ந்தே போயுள்ளார் நிக் டே. இது தொடர்பான செய்தியும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

RING

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்