‘இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் பிரபலங்கள்’... ‘பிரதமர் மோடி, கிரிக்கெட் வீரர் தோனி அசத்தல்'!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகளவில் மற்றும் இந்திய அளவில் அதிகம் விரும்பப்படும் பிரபலங்கள் குறித்த ஆய்வை, லண்டன் நிறுவனம் நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய அளவில் பிரதமர் மோடி, கிரிக்கெட் வீரர் தோனி ஆகியோர் அடுத்தடுத்து இடம்பிடித்து உள்ளனர்.

பிரிட்டன் தலைநகர் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு, ‘யூகவ்’ (YouGov) என்ற நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனம் பொதுமக்களின் கருத்துகள், புள்ளிவிவரங்களைத் திரட்டி, அதிகம் விரும்பப்படும் பிரபலங்களை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், 41 நாடுகளில் அதிகம் விரும்பப்படும் பிரபலங்கள் பற்றி ஆய்வு நடத்தி சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. 

அதன்படி இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் பிரபலங்கள் பட்டியலில், பிரதமர் மோடி, முதலிடத்தில் இருக்கிறார். உலகளவில் அவர் 6-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவில் பிரதமர் மோடிக்கு அடுத்தநிலையில், அதிகம் விரும்பப்படும் பிரபலங்களில், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி 2-வது இடத்தில் உள்ளார். இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் பெண்களில், குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் முதலிடத்தில் உள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்