அதெல்லாம் 'மன்னிப்பு' கேட்க முடியாது... கொரோனா விவகாரத்தில் 'சீனாவுக்கு' செம பதிலடி... 'எந்த' நாடுன்னு பாருங்க!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா விவகாரம் தொடர்பாக வரையப்பட்ட கார்ட்டூனில் எந்த தவறும் இல்லை. அதனால் நாங்கள் மன்னிப்பு கேட்க முடியாது என டென்மார்க் அரசு தெரிவித்து உள்ளது.
சீனாவில் இருந்து பரவியதால் கொரோனா வைரஸை சீன வைரஸ் என்றே அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டு வந்தார். இதனால் சீன அரசு அமெரிக்க அதிபரை கடுமையாக விமர்சனம் செய்து வந்தது. தற்போது அமெரிக்காவிலும் கொரோனா தீவிரமாக பரவி வருவதால் ட்ரம்ப் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறார். இதற்கிடையில் சீன அதிபர் ஜின்பிங் அமெரிக்க அதிபருடன் டெலிபோனில் பேசியதையடுத்து, இனிமேல் அப்படி பேசப் போவதில்லை என்று டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.
இந்த நிலையில் டென்மார்க் நாட்டின் ஜில்லண்ட் போஸ்டர்ன் என்ற பத்திரிகை கடந்த 23- ந் தேதி ஒரு கார்ட்டூன் வெளியிட்டிருந்தது. அந்த கார்ட்டூனில் சீன தேசியக் கொடியில் உள்ள ஐந்து நட்சத்திரங்களுக்கு பதிலாக ஐந்து கொரோனா வைரஸ் வடிவங்கள் இடம் பெற்றிருந்தன.இந்த கார்ட்டூன் வெளியானதும் சீனா கடும் கோபமடைந்து டென்மார்க் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்தது. டென்மார்க்கில் உள்ள சீன தூதரகமும் இதே கோரிக்கையை வலியுறுத்தியது.
ஆனால் இதுகுறித்து மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று டென்மார்க் அரசு பதில் அளித்தது. மேலும் டென்மார்க் அதிபர் ஃப்ரெட்ரிக்ஸன் இதுகுறித்து கூறுகையில், '' எங்களது நாட்டில் பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் இருப்பது போல வரைவதற்கு சுதந்திரம் இருக்கிறது,'' என தெரிவித்து இருக்கிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘2 வாரத்தில் 100 படுக்கைகள் கொண்ட ஹாஸ்பிட்டல்’.. ‘WorkFromHome பார்ப்பவர்களுக்கு ஜியோ மூலம்..!’.. வெளியான அதிரடி அறிவிப்பு..!
- “ரீசார்ஜ் பண்லனாலும் ஏப்ரல் 20 வரை சேவை துண்டிக்கப்படாது!” - ‘பிரபல நெட்வொர்க்கின் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி!’
- 'நான்கே நாளில் ஐந்திலிருந்து 7 லட்சமாக உயர்வு..'. 'அதிர்ச்சியை' ஏற்படுத்தும் 'வேகம்...' 'முன்பை' விட 'தீவிரமானது' தாக்கம்...
- "கொரானாவுக்கு எதிரான முயற்சிகளுக்கு முதல்வருக்கு நன்றி!" .. ‘பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி அளித்த சக்தி மசாலா நிறுவனம்!’
- ‘என் ஏரியால 15 பேருக்கு கொரோனா இருக்கு!’.. ‘வாட்ஸ்-ஆப்பில் வந்த தகவல்.. பெண் செய்த பரபரப்பு காரியம்!’
- 'என் பிள்ளைங்க அவங்க 'அப்பா' முகத்த கடைசியா ஒருதடவ பார்க்க முடியலயே!'... துபாயில் மரணமடைந்த கணவர்!... கொரோனா எதிரொலியால்... இதயத்தை ரணமாக்கும் துயரம்!
- 'தம்' அடிப்பவர்களை 'கொரோனா' தொற்றுமா? 'ஆய்வு' முடிவுகள் சொல்வது 'என்ன?'... 'ஷாக் ரிப்போர்ட்?...'
- ‘சாப்பாடு இல்ல’... ‘போலீஸ் பணியின் மீதான ஈர்ப்பு’... ‘450 கி.மீ. தொலைவில் உள்ள காவல்நிலையம்’... ‘20 மணிநேரம் நடந்தே சென்ற இளம் கான்ஸ்டபிள்’!
- 'சொந்த ஊர்' திரும்பும் 'தொழிலாளர்களுக்கு' சோதனை... சொந்த 'நாட்டுக்குள்ளேயே' அந்நியர்கள் போல்... 'அதிர்ச்சியளிக்கும் அதிகாரிகளின் செயல்...'
- ‘அப்பா இறந்துட்டாரு’!.. ‘கதறியழுத பிள்ளைகள்’.. கொரோனா பயத்தால் நடந்த கொடுமை.. நெஞ்சை ரணமாக்கிய சோகம்..!