"இது என்ன இப்டி இருக்கு?!.." டைனோசர் அழிஞ்ச இடத்துல கண்டறியப்பட்ட ராட்சத உயிரினம்.. மிரண்டு போன ஆய்வாளர்கள்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பரந்து விரிந்து கிடக்கும் கடல் நீர் அருகே நேரத்தை செலவிடுவது, எந்த அளவுக்கு புத்துணர்ச்சியாக இருக்கிறதோ, அதே வேளையில், நேருக்கு அடியில் நிறைந்து கிடக்கும் பல ஆச்சரியமான உயிரினங்களும் மிக அரிதாக தோன்றி, மக்களுக்கு ஒருவித பிரம்மிப்பை ஏற்படுத்தும்.

Advertising
>
Advertising

Also Read | சர்வதேச போட்டியில்.. ட்ரெண்ட் போல்ட் எடுத்த முடிவு.. கிரிக்கெட் உலகை திரும்பி பார்க்க வைத்த சம்பவம்

அந்த வகையில், தற்போது மெக்சிகோ பகுதியில் உள்ள கடல் நீரில் கண்டெடுக்கப்பட்டுள்ள ராட்சத உயிரினம் தொடர்பான செய்தி, பலரையும் மிரள வைத்துள்ளது.

மெக்சிகோவை அடுத்த Yucatan Peninsula என்னும் பகுதியில் தான், Isopods என்ற ஒரு வகை உயிரினம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தன்னுடைய உறவினர் வகை உயிரினங்களுடன், 25 மடங்கு பெரிதான இந்த ராட்சத உயிரினம், கடலுக்கு அடியில், சுமார் 2500 அடியில் இருந்துள்ளது.

இந்த ராட்சத உயிரினத்திற்கு, மொத்தம் 14 கால்களும், 10 இன்ச் விட அதிக நீளமும் இருப்பது தெரிய வந்துள்ளது.

அதே போல, Isopad என்ற இந்த உயிரினம் கண்டெடுக்கப்பட்ட இடமானது, சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்களை அளித்த asteroid தாக்குதல் நடந்த பகுதி என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், இந்த வினோத விலங்கின் மீது தனித்துவமாக அமைந்திருக்கும் நிலையில் ஒரு மஞ்சள் நிறத்தில் ஓடு ஒன்றும் உள்ளது. கடல் நீரில் இந்த உயிரினத்தின் உறவினர்களான நண்டு, இறால் ஆகியவற்றில் இருந்து நீண்ட ஆழத்திலும் இவை வாழ்ந்து வருகிறது. அது மட்டுமில்லாமல், அளவிலும் அவற்றை விட இது பெரிதாகவே இருக்கிறது.

இந்த உயிரினமானது, கடலின் மிக ஆழமான பகுதிகளில் அரிதாகவே நேரில் அறியப்பட்டு வருகின்றன. அதே போல, சுமார் ஒரு அடி, எட்டு இன்ச் வரை வளரும் இந்த உயிரினமானது, பார்க்க சற்று பயங்கரமாக தோன்றினாலும், அவை மனிதர்களுக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதே போல, இந்த ராட்சத உயிரினம் தொடர்பாக, நிறைய ஆவிகளையும் உட்படுத்தி, பல தகவல்களையும் ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகமாக வைரல் ஆகி வரும் நிலையில், பலரும் பலவிதமான கருத்துக்களை இந்த ராட்சத உயிரினம் குறித்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read | 14 வருசம் முன்னாடி.. வேலைக்கு Apply பண்ண 'வாலிபர்'.. பதிலே வரல'ன்னு.. அவரு செஞ்சதுதான் 'அல்டிமேட்'

SEA CREATURE, ISOPODS, DISCOVERED

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்