'கொரோனா' வைரஸை ஏமாற்றும் டீகாய் புரோட்டீன்கள்... 'பரவலைத் தடுக்க' விஞ்ஞானிகளின் 'புதிய ஆயுதம்...' 'மனித' குலத்தை காக்க வரும் 'மாமருந்து...'
முகப்பு > செய்திகள் > உலகம்டீகாய் புரோட்டீன்களை உடலுக்குள் செலுத்துவதன் மூலம் கொரோனா பரவலை வெற்றிகரமாகத் தடுக்க முடியும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
கொரோனா வைரஸை மனித உடலில் இருந்து விரட்ட புதிய ஆய்வுகள் உலகம் முழுக்க நடைபெற்ற வண்ணம் உள்ளது. கொரோனா வைரசை ஏமாற்றி நுரையீரலுக்குள் பரவுவதைத் தடுக்கும் வகையில் புதிய யுக்தி ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
பொதுவாக கொரோனா வைரஸ் ஏசிஇ-2 ரிசப்டார்கள் மூலமாக மனித உடலுக்குள் செல்லுவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த ரிசப்டார்கள் மூலமாகவே கொரோனா வைரஸ் ரத்த ஓட்டத்தில் கலந்து தொற்றை நுரையீரலுக்குள் பரப்புகிறது.
தற்போது இந்த ஏசிஇ - 2 ரிசப்டார்களை ஒத்திருக்கும் இந்த டீகாய் புரதங்களை நோயாளியின் உடலுக்குள் செலுத்துவதால், கொரோனா வைரஸ் அவற்றை தொற்ற ஆரம்பிக்கும். இதன் மூலும் நுரையீரலுக்குள் இருக்கும் டீகாய் புரதங்களை வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுத்து, பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். லெய்சிஸ்டர் பல்கலை விஞ்ஞானிகள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
இந்த டீகாய் புரதங்கள் வைரஸ்ஸை உடல் தசைகளுக்குள் சேர விடாமல் தடுத்து ஏமாற்றி தன்னோடு சேர்த்துக் கொண்டு கொரோனா அறிகுறிகள் தென்படாமல் நோயைப் போக்க வல்லது என விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
'hope against the horriable pandamic' என இந்த முறையை விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். உலகம் முழுவதும் இது குறித்த ஆராய்ச்சி நடைபெற்று வந்தாலும், இது மிகவும் ஆபத்தானது என பலர் நிராகரித்து விட்டனர். இந்த வழிமுறையால் கொரோனா தாக்கம் உடையவருக்கு அதீத பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து லெய்சிஸ்டர் பல்கலைக்கழக பேராசிரியர் நிக் ப்ரிண்டில் கூறுகையில், கொரோனா வைரஸை கவரும் டீகாய் புரதத்தை உடலில் செலுத்துவதன் மூலமாக கொரோனா வைரஸ் தாக்கத்தை வேறோடு அழிக்க முடியும் எனக் கூறியுள்ளார். இதுமட்டும் வெற்றி அடைந்துவிட்டால் மனித இனத்தை கொரோனாவில் இருந்து காக்கும் மாமருந்தாக இது அமையும் என கூறியுள்ளார்.
ஏசிஇ- 2 ரிசப்டார்கள் நமது உடலில் உள்ள அனைத்து உயிரிகளிலும் உள்ளது. ஆனால் நமது நுரையீரலிலுள்ள ஏசிஇ - 2 ரிசப்டார்களை மட்டுமே கொரோனா வைரஸ் தாக்கி அழிக்கிறது என விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். நமது நுரையீரலுக்குல் இந்த ரிசப்டார்கள் என்னென்ன பணிகள் செய்கிறது என விஞ்ஞானிகள் இன்னும் சரியாக கண்டறியவில்லை. ஆனால், கொரோனா வைரஸ் நுரையீரலுக்குள் பரவ இந்த ரிசப்டார்களையே நம்பி உள்ளன என்பதை மட்டும் ஜெர்மன் விஞ்ஞானி ஒருவர் துல்லியமாக கண்டறிந்து 'செல்' என்ற ஜெர்மன் விஞ்ஞான இதழில் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'எங்க புள்ளைய கடைசியா ஒரு தடவ'... கேரளாவில் நடந்த மகனின் இறுதிச்சடங்கு... ஃபேஸ்புக்கில் பார்த்து கதறித்துடித்த பெற்றோர்!.. மனதை நொறுக்கிய துயரம்!
- 'அசந்த நேரத்துல அடிக்க பிளான் போடுதா 'சீனா' ?... 'HDFC வங்கியில் அதிகரித்த முதலீடு' ... பகீர் கிளப்பும் பொருளாதார நிபுணர்கள்!
- '14 நாட்கள்' தனிமைப்படுத்தலுக்குப் 'பிறகு...' '25 நாட்கள்' கடந்து தென்பட்ட 'கொரோனா அறிகுறிகள்...' 'குழப்பத்தில் மருத்துவர்கள்...'
- 'ஹெலிகாப்டரிலிருந்து' பணம் 'கொட்டுவார்களா?...' 'வீட்டு வாசலில்' காத்திருந்த 'கிராம மக்கள்...' 'வதந்தி பரப்பிய' தனியார் சேனலுக்கு 'நோட்டீஸ்...'
- ஏப்ரல் 20ம் தேதிக்கு பின்... எவற்றை எல்லாம் செய்ய அனுமதி?... மத்திய அரசு புதிய அறிவிப்பு!.. முழு விவரம் உள்ளே
- “எங்கயும் இப்படி இல்லங்க.. தமிழ்நாட்டுலதான்!”.. முதல்வரின் ஸ்பாட் விசிட்! சேலத்தில் கொரோனா அப்டேட்ஸ் என்ன?
- ‘சென்னையில் மொத்தம் 217 பேருக்கு கொரோனா’.. ‘இந்த’ ஏரியாலதான் பாதிப்பு கொஞ்சம் ‘அதிகம்’.. வெளியான லிஸ்ட்..!
- “3 வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிப்பு!.. இப்ப தளர்த்துனா அப்றம்..”.. நிபந்தனைகளுடன் ‘இங்கிலாந்து’ எடுத்த முக்கிய முடிவு!
- ‘அவுங்கள உடனே சரி பண்ணனும்’... ‘இப்படியே விடக் கூடாது... ‘கொந்தளித்த அதிபர் ட்ரம்ப்’
- 'மச்சி சென்னை சென்னை தாண்டா'... 'ஆளே இல்லாமல் எப்படி இருக்கும்'? ... 'Drone'ல் மின்னிய நம்ம 'சென்னை'... காவல்துறை வெளியிட்ட வீடியோ!