“யாருங்க சொன்னா? நான் உசுரோடா தான் இருக்கேன்.. நம்புங்க!”.. ‘இறந்ததாக’ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பெண்.. ‘உயிருடன் இருப்பதை நிரூபிக்க’ 3 வருடமாக போராட்டம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரான்சிலுள்ள saint joseph என்ற கிராமத்தை சேர்ந்தவர் jeanne pouchain(58). இவர் நடத்திய நிறுவனம் ஒன்றில் பணிப்புரிந்த பெண் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இதனால் அப்பெண் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து, 2004 ஆம் ஆண்டு, தொழிலாளர் நல ஆணையம் ஒன்று, jeanne அந்த பெண்ணுக்கு 12,470 பவுண்டுகள் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இந்நிலையில் jeanne-வின் வழக்கறிஞர் அந்த பெண் வேலையிலிருந்து நீக்கப்பட்டதற்கு jeanne-வினுடைய நிறுவனம் பொறுப்பல்ல என வாதிட்டதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. பின்னர் பல்வேறு விசாரணைகள் மற்றும் மேல் முறையீடுகளுக்குப் பிறகு jeanne-வின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆனாலும் jeanne-வின் நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட அந்த பெண்ணோ இதை அத்தனை சாமானியத்தில் விடுவதாக இல்லை. தொழிலாளர் நல ஆணையத்திடம் சென்று, தான் தனது நிறுவனத்தின் முதலாளியான jeanne-க்கு அனுப்பிய கடிதங்கள் எதற்கும், jeanne-வின் தரப்பில் இருந்து எவ்வித பதிலும் இல்லை எனவும், எனவே jeanne இறந்துவிட்டார் எனவும் தெரிவித்துள்ளார் அந்த பெண்.

இதனால், jeanne அதிகாரப்பூர்வமாக இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இப்படி அறிவிக்கப்பட்ட காரணத்தால், jeanne தன்னுடைய கணவர் மற்றும் மகனுடன் இணைந்து வங்கியில் வைத்திருக்கும் கூட்டு வங்கிக்கணக்கை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் jeanne தன்னுடைய ஓட்டுநர் உரிமம், அடையாள அட்டை மற்றும் மருத்துவக் காப்பீடு அட்டை என எதையுமே பயன்படுத்தமுடியாது.

பிரான்ஸ் நாட்டு ஆவணங்கள் எதிலுமே அவர் பெயர் இல்லை. இதனால் வாங்கிய கடனையும் jeanne-ஆல் செலுத்த முடியாமல் போனதால், அவருடைய காரை அதிகாரிகள் பறிமுதல் செய்துவிட்டார்கள். தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க 3 ஆண்டுகளாக போராடி வரும்  jeanne, “நான் இந்த உலகத்திலேயே இல்லை. நான் வீட்டு வாசலிலேயே சும்மா உட்கார்ந்துக்கொண்டு இருக்கிறேன். எதுவுமே செய்வதில்லை!” என சோர்வுடன் அவர் கூறியுள்ளார். 

ALSO READ: 'ஐந்தரை லட்சம் பேஸ்புக் பயனாளர்களின் சுய விபரங்கள் திருட்டா?' .. ‘அதுவும் இப்படி ஒரு காரணத்துக்காக?’ .. ‘பிரபல’ கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மீது சிபிஐ வழக்கு!

“அடுத்து என்ன ஆகுமோ என அச்சப்பட்டுக்கொண்டே வாழும் அவர், எல்லாம் மாறும் என்ற ஒரே நம்பிக்கையுடன் வாழ்கிறேன்” என கூறும் அவர், தன்னுடைய வழக்கறிஞர் தொடர்ந்துள்ள வழக்கில் தனக்கு வெற்றி கிடைக்கும் என  நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்