54 வருஷத்துக்கு முன்னாடி விபத்தில் சிக்கிய விமானம்.. சமீபத்துல அதிகாரிகளுக்கு கிடைச்ச ஷாக்-ஆன தகவல்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

54 ஆண்டுகளுக்கு முன்னர் விபத்தில் சிக்கிய விமானத்தின் பகுதிகளை தற்போது அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Advertising
>
Advertising

Also Read | 350 வருஷமாக கடலில் கொட்டிக்கிடந்த பொக்கிஷம்.. துணிஞ்சு இறங்குன வீரர்களுக்கு அடிச்ச ஜாக்பாட்.!

கடந்த 1968 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டின் மலைப் பகுதியான ஜங்ஃப்ரௌஜோச் (Jungfraujoch) மேலே சென்ற விமானம் ஒன்று விபத்தை சந்தித்தது. இதில் பயணித்த பயணிகள் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடல்களை மீட்கும் பணி உள்ளூர் வீரர்களால் உடனடியாக முன்னெடுக்கப்பட்டது. ஆனால், ஜங்ஃப்ரௌஜோச் பகுதியில் இருந்த அடர்த்தியான பனி காரணமாக விமானத்தின் பகுதிகளை கண்டறிந்து அவற்றை வெளியே எடுக்க முடியாமல் போயிருக்கிறது. இந்நிலையில், இந்த விமானத்தின் பகுதிகள் கிடக்கும் இடம் கடந்த வியாழக்கிழமை அதிகாரிகளுக்கு தெரியவந்திருக்கிறது.

54 வருடம் கழித்து

ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜங்ஃப்ரௌஜோச் மலைப் பகுதியின் மீது பறந்து கொண்டிருந்த பைபர் செரோகி ரக விமானம் இரு சிகரங்களுக்கு இடையே விபத்தை சந்தித்தது. இந்த சிறிய ரக விமானத்தில் ஒரு ஆசிரியர், மருத்துவர் மற்றும் அவரது மகன் பயணித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்து சிக்கிய இடத்தில் இருந்து மூன்று பேரின் உடல்களும் மீட்கப்பட்டிருக்கிறது.

பனி அதிகம் இருந்த பகுதி என்பதாலும், அப்போதைய காலகட்டத்தில் இருந்த தொழில்நுட்ப சாதனங்களின் பற்றாக்குறையாலும்  விமானத்தின் பகுதிகளை கண்டறிவதில் மிகுந்த சிரமம் இருந்திருக்கிறது. இருப்பினும் இந்த விமானத்தின் பாகங்களை மீட்டெடுக்க தொடர் முயற்சிகள் நடைபெற்று வந்திருக்கின்றன.

மீட்பு

இந்நிலையில், இந்த விமானத்தின் எஞ்சிய பாகங்கள் தென்மேற்கு வாலிஸ் மண்டலத்தில் உள்ள அலெட்ச் பனிப்பாறையில், ஜங்ஃப்ராவ் மற்றும் மோஞ்ச் மலை உச்சிக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து அப்பாகங்களை மீட்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், விமானம் விபத்தை சந்தித்ததற்கான காரணங்களை கண்டறிய முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.

இதன்படி, 54 வருடங்களுக்கு முன்னால் விபத்தை சந்தித்த விமானம் பற்றிய பல கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம் என்கிறார்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள். இது சுவிட்சர்லாந்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | "அம்மா சொன்ன அந்த விஷயம் தான்.." போனில் வந்த அழைப்பு.. ஆறே மாசத்தில் கோடீஸ்வரரான 'கான்ஸ்டபிள்'..

DEBRIS, PLANE, CRASH, SWISS ALPS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்