"தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலியா?..." 'சமூக ஊடகங்களில்' தீயாய் பரவும் 'தகவல்...'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனா பாதிப்பால் பாகிஸ்தானில் உயிரிழந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது.

Advertising
Advertising

இந்தியாவில் 1993ம் ஆண்டு நடைபெற்ற மும்பை குண்டு வெடிப்பு சம்பவங்கள் உள்பட பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய நிழல் உலக தாதா  தாவூத் இப்ராகிம் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதாக இந்தியா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

அதன்பேரில் பாகிஸ்தானிடம் தகவல்கள் வழங்கியும், அந்த நாடு தங்கள் நாட்டில் அவர் இல்லவே இல்லை என உறுதிபட மறுத்து வருகிறது. தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் தான் உள்ளார் என்பது தொடர்பாக பல்வேறு ஆதாரங்கள் இருந்தும் பாகிஸ்தான் அதனை தொடர்ச்சியாக மறுத்து வருகிறது.

உலக அளவில் தேடப்படும் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள தாவூத்தை, பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ ஆதரவு வழங்கி பாதுகாத்து வருகிறது என்று புகாரும் உள்ளது.

இந்த நிலையில்  தாவூத் இப்ராகிமிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டடுள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்