"நான் அப்பா மாதிரி இல்லன்னு".. அம்மா'வ எல்லாரும் சந்தேகப்பட்டாங்க.. 38 வருசம் கழிச்சு தெரிஞ்ச உண்மை காரணம்.. நொறுங்கி போன தாய்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பெண் ஒருவர் தனது தந்தை போல இல்லாமல் போன காரணத்தினால், அவரது தாய் அனுபவித்து வந்த இன்னல்கள் குறித்து பேசிய விஷயமும், 39 ஆண்டுகள் கழித்து தெரிய வந்த உண்மையும் அவரை நிலைகுலைய வைத்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "பெத்தவங்களோட விவசாயத்தை கையில எடுத்தோம்".. ஐடி வேலையை உதறிவிட்டு களத்தில் குதித்த பட்டதாரிகள்!!.. அடுத்து நடந்த அற்புதம்!!

ரஷ்யாவை சேர்ந்தவர் Alyona Romanova. இவருக்கு தற்போது 39 வயதாகிறது. முன்னதாக இவரது சிறு வயது முதலே இவரது தாயாரான வேலன்டினாவை அவரின் தந்தை இன்னலுக்கு ஆளாக்கி வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு காரணம், Alyona தனது தந்தையை போல இல்லாமல் போனது தான். அவர் பார்ப்பதற்கு ஒரு ஆசிய நாட்டை சேர்ந்தவர் போல இருந்துள்ளார். இதனால், உள்ளூர்வாசிகள் கூட தான் தனது தந்தை போல இல்லை என்பதை சுட்டிக் காட்டி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, Alyona-வின் தாயார் வேலன்டினா ஏராளமான இன்னல்களை அனுபவித்து வந்துள்ளார். அதே போல, அவரது கணவர் கூட வேலன்டினாவை சந்தேகத்துடன் பார்த்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மகள் தந்தையை போல இல்லாமல் போனதால், இதற்கான காரணம் குறித்து அறியவும், தனது தாய் சந்தித்த இன்னல்களுக்கு பதில் தேடவும் முடிவு செய்துள்ளார் Alyona.

அதன் படி, பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளின் இறுதியில், தவறான பெற்றோர்களால் வளர்த்தப்பட்டு வந்த மனதை நொறுக்கும் தகவல், Alyona-வுக்கு கிடைத்துள்ளது. கடந்த 1982 ஆம் ஆண்டு, Alyona பிறந்த அதே மருத்துவமனையில், Gulsina என்ற பெண்ணும் பிறந்துள்ளார். இவர்கள் இருவரையும் அங்கிருந்த மருத்துவ ஊழியர்கள் தவறாக அடையாளம் குறிப்பிட்டதால், பிறந்த அன்றே குழந்தைகளும் மாறி போயுள்ளனர்.

இதன் காரணமாக தான், தன்னை வளர்த்து வந்த தாயை அவரது கணவர் மற்றும் ஊர் மக்கள் உள்ளிட்ட அனைவரிடமும் இருந்து சந்தேக புத்தியுடன் பார்க்கப்பட்டு அவ பெயரை சேர்த்துள்ளார் என்பதை அறிந்து முற்றிலுமாக உடைந்து போனார் Alyona.

முன்னதாக, பல ஆண்டுகளுக்கு முன்பே Gulsina மற்றும் அவரது குடும்பம் குறித்து தெரிந்த போதும் அதனை நிரூபிக்கும் வாய்ப்பு Alyona வுக்கு அமையவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் பின்னர், DNA பரிசோதனை மேற்கொண்ட பிறகு தான் தற்போது அவர்கள் சிறு வயதில் மாற்றப்பட்ட விஷயமும் உறுதியாகி உள்ளது.

இத்தனை ஆண்டுகள் தான் வித்தியாசமாக இருந்ததால், தனது தாய் வேலன்டினா ஏராளமான இன்னல்களை அனுபவித்து வந்த நிலையில், தற்போது தெரிய வந்த விஷயம் அவர்கள் அனைவரையும் கடும் அதிர்ச்சியில் தான் ஆழ்த்தி உள்ளது.

Also Read | மகனை Divorce செய்ய நினைத்த மருமகள்.. காரில் Follow செய்த மாமனார்.. பெண்ணின் கடைசி போன் காலில் துலங்கிய துப்பு!!

DAUGHTER, FATHER, MOTHER, REVEAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்