"இது தான் அம்மா மாதிரி ஆகுறதா??.." இணையவாசிகள் இதயத்தை வென்ற சம்பவம்.. அசத்திக் காட்டிய தாய் - மகள் காம்போ

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அவ்வப்போது இணையத்தில் மனதை நெகிழ வைக்கும் சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் அல்லது செய்திகள் வெளியாகி, பார்ப்போர் பலரையும் உணர்ச்சிவசப்பட வைக்கும்.

Advertising
>
Advertising

அப்படி ஒரு நிகழ்வு தொடர்பான வீடியோ தான், தற்போது இணையத்தில் பலரது இதயத்தையும் வென்றுள்ளது.

'Southwest' என்ற விமான நிறுவனம், தங்களின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, Keely என்ற இளம்பெண், பைலட்டாக பணிபுரிய உள்ள நிலையில், அவரது முதல் வேலை யாருடன் என்பது தான் பலரையும் வியக்க வைத்துள்ளது. அவரது தாயாரான Holly, Southwest விமானத்தில் கடந்த பல ஆண்டுகளாக விமானியாக பணிபுரிந்து வருகிறார். தற்போது அதே விமானத்தில் தான், Holly-ன் மகளான Keely-ம் விமானியாக நியமிக்கப்பட்டுள்ளார். தாயை போல ஆக வேண்டும் என்ற விருப்பத்துடன் படித்து தேர்ச்சி பெற்ற Keely, தாயுடன் இணைந்து விமானம் ஓட்டி, விமானியாக தனது முதல் பணியை சிறப்பாக தொடங்கி உள்ளார்.

அப்படி தாய் மற்றும் மகள் ஆகிய இருவரும் விமானிகளாக சேர்ந்து பணியாற்ற உள்ளதைக் குறிப்பிட்டு வீடியோ ஒன்றை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும், தங்களின் 55 ஆண்டுகால விமான சேவையில், தாய் - மகள் இணைந்து விமானத்தை ஓட்டுவது இது தான் முதல் முறை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோவை அந்த நிறுவனம் பதிவிட்ட உடனேயே, நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாக தொடங்கியது.

மேலும், இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும், சிறந்த தாய் மகள் காம்போ என்றும், பெண்ணின் கனவு நிஜமான ஒரு தருணம் என்றும் பல விதமான பாசிட்டிவ் கருத்துக்களை அவர்களை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

PILOT, MOM, DAUGHTER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்