சிறுகோளை சிதறடித்த நாசாவின் விண்கலம்.. கரெக்ட்டான நேரத்துல வெப் தொலைநோக்கி எடுத்த புகைப்படம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா அனுப்பிய Dart விண்கலம், சிறுகோள் ஒன்றை கடந்த 26 ஆம் தேதி மோதியது. இதனை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்திருக்கிறது.
டார்ட் மிஷன்
டிடிமோஸ் எனும் இரட்டை சிறுகோள்கள் அமைப்பை அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா ஆய்வு செய்துவருகிறது. டிடிமோஸ் என்னும் சிறுகோள் 780 மீட்டர் விட்டம் கொண்டது. இதற்கு அருகே அமைந்துள்ள டிமார்போஸ் 160 மீட்டர் விட்டம் உடையது. முன்னும் பின்னுமாக இவற்றின் இயக்கம் இருப்பதால் டிமார்போஸ்-ன் சுற்றுவட்ட பாதையை மாற்றியமைக்க திட்டமிட்டது நாசா. இதற்காகவே பிரத்தேயகமாக DART எனும் விண்கலத்தை உருவாக்கியது. இந்த விண்கலம் மூலமாக டிமார்போஸ் சிறுகோளை கடந்த 26 ஆம் தேதி தாக்கியது நாசா. இதன்மூலம், டிமார்போஸ்-ன் சுற்றுவட்ட பாதை மாற்றியமைக்கப்படும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஜேம்ஸ் வெப்
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 80 ஆயிரம் கோடி) செலவில் உருவாக்கியது நாசா. கடந்த டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்ட இந்த தொலைநோக்கி மனித குல வரலாற்றின் முக்கிய சாதனையாக பார்க்கப்படுகிறது. 6.2 டன் எடைகொண்ட இந்த தொலைநோக்கி -230 டிகிரி செல்சியஸ் வெப்பத்திலும் இயங்கக்கூடியது. இது, முன்னர் நாசாவால் அனுப்பப்பட்ட ஹப்பிள் தொலைநோக்கி போல 100 மடங்கு சக்திவாய்ந்தது.
புகைப்படங்கள்
இந்நிலையில், டிமார்போஸ் சிறுகோளை டார்ட் விண்கலம் மோதியதை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்திருக்கிறது. பூமியில் இருந்து 11 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இந்த வெடிப்பு நடந்திருக்கிறது. அதேவேளையில், ஹப்பிள் தொலைநோக்கியும் இந்த நிகழ்வை படம் பிடித்திருக்கிறது. தற்போது, இந்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
குயின்ஸ் பல்கலைக்கழக பெல்ஃபாஸ்டின் வானியலாளர் ஆலன் ஃபிட்ஸிம்மன்ஸ் இதுபற்றி பேசுகையில்,"பூமியில் இருந்து பல மில்லியன் கிலோமீட்டர் உயரத்தில் இந்த மோதல் நடைபெற்றிருக்கிறது. இதனை நெருங்கி பார்க்க வெப் மற்றும் ஹப்பிள் தொலைநோக்கிகள் வெளியிட்டுள்ள படங்கள் உதவுகின்றன" என்றார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இப்படியா பண்றது?.. சல்லி சல்லியா நொறுக்கிட்டாரு.. நாசாவின் மெகா திட்டம்.. மஸ்க் பகிர்ந்த மீம்..!
- ரூ.2000 கோடி திட்டம்.. விண்கலத்தை சிறுகோளில் மோதச்செய்த நாசா.. திகைக்க வைக்கும் வீடியோ..!
- விண்வெளியில் இன்னும் 3 நாள்ல நாசா செய்ய இருக்கும் சம்பவம்.. வரலாற்றுலயே இதான் ஃபர்ஸ்ட் டைம்.. Live ஆ பாக்கலாமாம்..!
- "இனிமே சூரியன பாக்குறப்போ எல்லாம் இந்த டவுட்டு தானே வரும்".. சூரியனின் நிறம் பற்றி எழுந்த விவாதம்.. விண்வெளி வீரர் சொன்னது என்ன??
- பூமியை நெருங்கும் விண்கல்??.. ரெட் அலெர்ட் விட்ட நாசா.. பின்னணி என்ன??
- பூமியை நெருங்கும் 110 அடி அகலமுள்ள விண்கல்.. அது ஒன்னு மட்டும் நடக்காம இருக்கணும்.. நாசா வெளியிட்ட பரபர அறிவிப்பு..!
- "இப்படி ஒன்ன நாங்க பார்த்ததேயில்லை".. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அனுப்பிய வியாழனின் புகைப்படம்.. திகைச்சுப்போன ஆராய்ச்சியாளர்கள்.!
- "2 நாள்ல 10 மடங்கு பெருசாகிடுச்சு.. அது ஒன்னு மட்டும் நடக்காம இருக்கணும்".. சூரியனில் உருவான Sun spot.. ஆராய்ச்சியாளர்கள் சொல்லிய பகீர் தகவல்..!
- "Black Hole சத்தம் இப்டி தான் இருக்கும்".. நாசா வெளியிட்ட ஆடியோ.. அமானுஷ்ய சத்தம் கேட்டு உறைந்து போன நெட்டிசன்கள்
- விண்வெளில இருந்து பூமிக்கு அனுப்பப்பட்ட கேப்ஸ்யூல்.. உலக நாடுகள் எல்லாம் இதுக்காக தான் வெயிட்டிங்.. அப்படி உள்ள என்னதான் இருக்கு.. வீடியோ..!