ரூ.2000 கோடி திட்டம்.. விண்கலத்தை சிறுகோளில் மோதச்செய்த நாசா.. திகைக்க வைக்கும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா சிறுகோள் ஒன்றின் மீது விண்கலத்தை மோதச் செய்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

இரட்டை சிறுகோள்கள்

சூரிய மண்டலத்தில் கோள்களை போலவே, பல சிறுகோள்கள் மற்றும் விண்கற்கள் ஆகியவையும் அமைந்து உள்ளன. அவற்றில் ஒன்றுதான் டிடிமோஸ் எனும் இரட்டை சிறுகோள்கள் அமைப்பு. டிடிமோஸ் என்னும் சிறுகோள் 780 மீட்டர் விட்டம் கொண்டது. இதற்கு அருகே அமைந்துள்ள டிமார்போஸ் 160 மீட்டர் விட்டம் உடையது. இந்த டிமார்போஸ், தனக்கு அருகில் உள்ள டிடிமோஸை சுற்றி வருகிறது.

இந்த விண்கல் அமைப்பு 1996 இல் அரிசோனா பல்கலைக்கழகத்தில் விண்வெளி கண்காணிப்பு திட்டத்தினை சேர்ந்த ஆராய்ச்சியாளரான ஜோ மொன்டானி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. அது துவங்கி இந்த சிறுகோளை நாசா ஆய்வு செய்துவருகிறது. இதில் சிரமத்தை ஏற்படுத்துவது இந்த இரண்டு சிறுகோள்களும் அமைந்திருக்கும் இடம் தான். பூமி, சூரியனை சுற்றுவதை விட குறைவான வேகத்தில் டிமார்போஸ், தனக்கு அருகில் உள்ள டிடிமோஸை சுற்றி வருகிறது.

விண்கலம்

முன்னும் பின்னுமாக இவற்றின் இயக்கம் இருப்பதால் டிமார்போஸ்-ன் சுற்றுவட்ட பாதையை மாற்றியமைக்க திட்டமிட்டது நாசா. இதற்காகவே பிரத்தேயகமாக DART எனும் விண்கலத்தை உருவாக்கியது. இந்த விண்கலம் கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் விண்ணில் ஏவப்பட்டது. இதன் முக்கிய பணியே டிமார்போஸ் சிறுகோளை தாக்குவது தான். மணிக்கு 24,000 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து டிமார்போஸ்-ஐ இந்த விண்கலம் தாக்கும் எனவும் இதனால், சிறுகோளின் சுற்றுவட்டப்பாதை மாற்றியமைக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தனர் ஆராய்ச்சியாளர்கள்.

வீடியோ

இந்நிலையில், இந்த தாக்குதல் திட்டமிட்டபடி நடைபெற்றிருக்கிறது. இருப்பினும் இந்த தாக்குதல் காரணமாக சிறுகோளின் சுற்றுவட்டப்பாதை எவ்வளவு தூரம் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது என்பதை தற்போது கூற முடியாது என ஆராய்ச்சியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக நாசா 345 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 2600 கோடி ரூபாய்) செலவழித்திருக்கிறது. இந்நிலையில், டிமார்போஸ் சிறுகோளை டார்ட் விண்கலம் மோதும் வீடியோவை நாசா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

NASA, DART, VIDEO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்