விண்வெளியில் இன்னும் 3 நாள்ல நாசா செய்ய இருக்கும் சம்பவம்.. வரலாற்றுலயே இதான் ஃபர்ஸ்ட் டைம்.. Live ஆ பாக்கலாமாம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா வரும் செப்டெம்பர் 26 ஆம் தேதி சிறுகோள் ஒன்றின் மீது விண்கலத்தை மோதச்செய்ய உள்ளது. இது நேரலையாக ஒளிபரப்பப்படும் என நாசா அறிவித்திருக்கிறது. இந்த சம்பவத்தை காண பலரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
Also Read | "அவன் மீண்டு வரணும்..அதுபோதும்".. மகனுடைய சிகிச்சைக்காக தந்தை எடுத்த நெகிழ வைக்கும் முடிவு..!
இரட்டை சிறுகோள்கள்
சூரிய மண்டலத்தில் கோள்களை போலவே, பல சிறுகோள்கள் மற்றும் விண்கற்கள் ஆகியவையும் அமைந்து உள்ளன. அவற்றில் ஒன்றுதான் டிடிமோஸ் எனும் இரட்டை சிறுகோள்கள் அமைப்பு. டிடிமோஸ் என்னும் சிறுகோள் 780 மீட்டர் விட்டம் கொண்டது. இதற்கு அருகே அமைந்துள்ள டிமார்போஸ் 160 மீட்டர் விட்டம் உடையது. இந்த டிமார்போஸ், தனக்கு அருகில் உள்ள டிடிமோஸை சுற்றி வருகிறது.
இந்த விண்கல் அமைப்பு 1996 இல் அரிசோனா பல்கலைக்கழகத்தில் விண்வெளி கண்காணிப்பு திட்டத்தினை சேர்ந்த ஆராய்ச்சியாளரான ஜோ மொன்டானி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. அது துவங்கி இந்த சிறுகோளை நாசா ஆய்வு செய்துவருகிறது. இதில் சிரமத்தை ஏற்படுத்துவது இந்த இரண்டு சிறுகோள்களும் அமைந்திருக்கும் இடம் தான். பூமி, சூரியனை சுற்றுவதை விட குறைவான வேகத்தில் டிமார்போஸ், தனக்கு அருகில் உள்ள டிடிமோஸை சுற்றி வருகிறது.
மோதல்
முன்னும் பின்னுமாக இவற்றின் இயக்கம் இருப்பதால் டிமார்போஸ்-ன் சுற்றுவட்ட பாதையை மாற்றியமைக்க திட்டமிட்டது நாசா. இதற்காகவே பிரத்தேயகமாக DART எனும் விண்கலத்தை உருவாக்கியது. இந்த விண்கலம் கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் விண்ணில் ஏவப்பட்டது. இதன் முக்கிய பணியே டிமார்போஸ் சிறுகோளை தாக்குவது தான். மணிக்கு 24,000 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து டிமார்போஸ்-ஐ இந்த விண்கலம் தாக்கும். இதனால், சிறுகோளின் சுற்றுவட்டப்பாதை மாற்றியமைக்கப்படும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
நேரலை
இந்நிலையில், டிமார்போஸ் சிறுகோளை DART விண்கலம் தாக்கும் நிகழ்வை மக்கள் நேரலையாக காணலாம் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா அறிவித்திருக்கிறது. செப்டம்பர் 26 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு இந்த நேரலை துவங்கும். 7.14 மணிக்கு இந்த மோதல் நிகழும் என நாசா தனது இணையதளத்தில் குறிப்பிட்டிருக்கிறது. விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு சிறுகோளை விண்கலம் கொண்டு தாக்கும் முதல் நிகழ்வை பார்க்க மக்களிடையே பெரும் ஆர்வம் எழுந்திருக்கிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "இனிமே சூரியன பாக்குறப்போ எல்லாம் இந்த டவுட்டு தானே வரும்".. சூரியனின் நிறம் பற்றி எழுந்த விவாதம்.. விண்வெளி வீரர் சொன்னது என்ன??
- பூமியை நெருங்கும் விண்கல்??.. ரெட் அலெர்ட் விட்ட நாசா.. பின்னணி என்ன??
- பூமியை நெருங்கும் 110 அடி அகலமுள்ள விண்கல்.. அது ஒன்னு மட்டும் நடக்காம இருக்கணும்.. நாசா வெளியிட்ட பரபர அறிவிப்பு..!
- "இப்படி ஒன்ன நாங்க பார்த்ததேயில்லை".. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அனுப்பிய வியாழனின் புகைப்படம்.. திகைச்சுப்போன ஆராய்ச்சியாளர்கள்.!
- "2 நாள்ல 10 மடங்கு பெருசாகிடுச்சு.. அது ஒன்னு மட்டும் நடக்காம இருக்கணும்".. சூரியனில் உருவான Sun spot.. ஆராய்ச்சியாளர்கள் சொல்லிய பகீர் தகவல்..!
- "Black Hole சத்தம் இப்டி தான் இருக்கும்".. நாசா வெளியிட்ட ஆடியோ.. அமானுஷ்ய சத்தம் கேட்டு உறைந்து போன நெட்டிசன்கள்
- விண்வெளில இருந்து பூமிக்கு அனுப்பப்பட்ட கேப்ஸ்யூல்.. உலக நாடுகள் எல்லாம் இதுக்காக தான் வெயிட்டிங்.. அப்படி உள்ள என்னதான் இருக்கு.. வீடியோ..!
- "இன்னைக்கும் நாளைக்கும் வானத்தை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க".. நாசா ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அறிவிப்பு..!
- செப்டம்பர் 26 ஆம் தேதி நாசா செய்ய இருக்கும் சம்பவம்.. உச்சகட்ட பரபரப்பில் ஆராய்ச்சியாளர்கள்..!
- செவ்வாய் கிரகத்தில்.. நூடுல்ஸ் மாதிரி இருந்த பொருள்??.. குழம்பிய நெட்டிசன்கள்.. கடைசியில் 'நாசா' கொடுத்த விளக்கம்..