குறைஞ்சபட்ச சம்பளமே ரூ.63 லட்சம்... "உழைக்கிறவங்களுக்கு நியாயமான சம்பளத்தை கொடுக்கனும்".. அதிரவைத்த CEO.. யாரு சாமி இவரு..?
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவை சேர்ந்த டான் ப்ரைஸ் என்னும் தொழிலதிபர் தற்போது வெளியிட்டுள்ள பதிவு பலரையும் திகைப்படைய செய்திருக்கிறது.
Also Read | எவ்வளவு தண்ணீர் பாய்ந்தாலும் நிரம்பாத அதிசய கிணறு.. IIT நிபுணர்கள் கண்டறிந்த ஆச்சர்யம் அளிக்கும் உண்மை..!
டான் ப்ரைஸ்
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் கடந்த 1984 ஆம் ஆண்டு பிறந்த டான் ப்ரைஸ் தற்போது கிராவிட்டி பேமெண்ட்ஸ் (Gravity Payments) என்னும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு தன்னுடைய மூத்த சகோதரரான லூகாஸ் என்பவருடன் இணைந்து இந்நிறுவனத்தை துவங்கினார். இவர் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இயங்கக் கூடியவர். இதனாலேயே பல லட்சக்கணக்கான மக்கள் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர். அதேபோல, எப்போதும் அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு நெட்டிசன்களை திகைக்க வைப்பது இவருடைய வாடிக்கை. அந்த வகையில் தற்போது இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பு இணைய வெளிகளில் பேசுபொருளாகியுள்ளது.
குறைந்தபட்ச ஊதியம்
டான் தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 80,000 அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 63 லட்ச ரூபாய்) வழங்கிவருவதாக தெரிவித்திருக்கிறார். மேலும், பிற நிறுவனங்களும் இதேபோல ஊழியர்களுக்கு நியாயமான முறையில் ஊதியத்தை வழங்க முன்வரவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்," எனது நிறுவனம் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 80 ஆயிரம் அமெரிக்க டாலர்களை ஊதியமாக வழங்குகிறது. பணியாளர்கள் எங்கு வேண்டுமானாலும் இருந்து வேலை செய்ய அனுமதித்திருக்கிறோம். ஊதியத்துடன் கூடிய பெற்றோர் விடுப்பு போன்ற முழுப் பலன்களையும் அளிக்கிறோம். ஒரு வேலைக்கு 300க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர்," யாரும் பணிபுரிய தயாராக இல்லை என்பது நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு சரியான முறையில் ஊதியத்தையோ மதிப்பையோ வழங்குவதில்லை என்பதை மோசமான முறையில் சொல்வதாகும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில், டான் தனது இந்த பதிவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து நெட்டிசன்கள் இதுகுறித்து ஆர்வமாக விவாதித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கோவிட்-க்கு பிறகு இந்திய ஊழியர்களிடம் MNC நிறுவனங்களின் புதிய கோரிக்கை.?
- 'Try' பண்ணி பாப்போமே.." 50,000 ஊழியர்களுக்காக.. CEO எடுத்த அதிரடி முடிவு.. பாராட்டும் நெட்டிசன்கள்
- "ஹய்யா.. Salary ஏத்திட்டாங்க".. இளம்பெண் போட்ட வீடியோ .. அப்போ பாத்து வந்த E-mail.. நொடியில் மாறிய வாழ்க்கை..!
- "3 வருசமா Students யாரும் வரல.. சம்பளம் மட்டும் எதுக்கு??.." ரூ.23.82 லட்சத்தை திருப்பி கொடுத்த பேராசிரியர்!
- "இந்த ஆபீஸ் எங்க பாஸ் இருக்கு??.." - ஊழியர்களுக்கு நிறுவனம் கொடுத்த வேற மாறி 'சர்ப்ரைஸ்'..
- 5 லட்சம் கோடி மதிப்புள்ள கம்பெனியின் CEO பதவியை ராஜினாமா செய்த நபர்.. அதுக்கு அவரு சொன்ன காரணம் தான் பலரையும் ஷாக்-ஆக வச்சிருக்கு..!
- "இனி பணத்துல சம்பளம் கொடுக்கமாட்டேன். இனிமே அதுதான் பெஸ்ட் வழி"..CEO போட்ட புது ஆர்டர்.. திகைத்துப்போன ஊழியர்கள்..!
- ‘எல்லாருக்கும் ரூ.3.87 லட்சம் போனஸ்’.. ஊழியர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய நிறுவனம்.. இதுக்கு அவங்க சொன்ன காரணம் தான் வேறலெவல்..!
- "இது எல்லாம் எங்களுக்கு செட் ஆகாது.." பிரபல நிறுவனத்தில் இருந்து.. 2 மாசத்துல கிளம்பிய 800 ஊழியர்கள்??
- வருஷத்துல எத்தன நாள் வேணும்னாலும் லீவ் எடுத்துக்கங்க..வாயை பிளந்த ஊழியர்கள்.. அருமையான கம்பெனியா இருக்கும்போலயே..!