‘கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பின்னர்’... 'ஆறுதல் அடையும் நகரம்’... ‘எனினும் எச்சரிக்கும் ஆளுநர்’!
முகப்பு > செய்திகள் > உலகம்உலக அளவில் எங்கும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் கொரோனா புரட்டி எடுத்து வரும் நிலையில், அங்குள்ள நியூயார்க் நகரில் ஆறுதல் அளிக்கக் கூடிய விஷயம் நடந்து வருகிறது.
அமெரிக்காவில் கொரோனாவின் கோர தாண்டவத்தால் இதுவரை 7,40,746 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 39,158 பேர் இறந்துள்ளனர். எனினும் அங்குள்ள நியூயார்க் நகரம் தான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாகும். இந்நிலையில் நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ கூறும்போது, “கடந்த மூன்று நாட்களில் கொரோனா பாதிப்பு விகிதம் முந்தைய நாட்களில் இருந்ததை விடக் குறைந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டவர்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. கிட்டத்தட்ட நியூயார்க்கில் 18,000 பேர் கொரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்ததனர். அந்த எண்ணிக்கை தற்போது 16,000 ஆகக் குறைந்துள்ளது. இறப்பு விகிதமும் 550-க்குக் கீழ் குறைந்துள்ளது. ஏப்ரல் 17-ல் நியூயார்க்கில் 540 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஏப்ரல் 15 அன்று 606 இறப்புகளைப் பதிவுசெய்துள்ளது.
இது முந்தைய வாரங்களில் இருந்ததை விடக் குறைந்த அளவு ஆகும். இருந்தபோதிலும் இன்னும் முழுமையாக கொரோனா தாக்குதலில் இருந்து வெளிவரவில்லை. அதனால் எச்சரிக்கையுடன் இருக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று அவர் கூறியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க்கில் 2,36,732 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் அங்கு 17,671 பேர் உயிரிழந்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "வண்டில இருந்து கைய எடுங்க சார்!".. காய்கறி விற்கும் பெண்ணுக்கும் போலீஸாருக்கும் இடையே நடந்த பரபரப்பு சம்பவம்!.. வீடியோ!
- '82% பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை...' 'திணறும் அசாம் அரசு...' '4 நெகடிவ்' முடிவுகள் வந்தால் மட்டுமே 'விடுவிக்க முடிவு...'
- இந்த '4 நாடுகளிடம்' கற்றுக் கொள்ளுங்கள்... "இவங்க இதுல கில்லாடிகள்..." 'சார்ஸ், மெர்ஸ்' கற்றுக் கொடுத்த 'பாடம்'...
- 'ஒரு வென்டிலேட்டரில்' 7 பேருக்கு 'சிகிச்சை...' 'புதிய சாதனத்தை' உருவாக்கிய 'பாகிஸ்தான் டாக்டர்...' 'வித்தியாசமாக' நன்றி தெரிவித்த 'அமெரிக்க மக்கள்...'
- பாதுகாப்பு உடைகளாகும் 'ரெயின்' கோட்டுகள்... '4 லட்சம்' பேர் வரை உயிரிழக்கும் 'அபாயம்'... திடீரென 'உயரும்' பாதிப்பால் 'உறைந்துள்ள' நாடு...
- 'தமிழகத்தில்' 1372 பேருக்கு 'கொரோனா' தொற்று...' 'சென்னையில்' மொத்தம் '235 பேர்' பாதிப்பு... இன்று (ஏப். 18) 'வெளியான லிஸ்ட்...'
- 'உலகிலேயே' கொரோனா பாதிப்பை 'சிறப்பாக' கையாளும்... 'பாதுகாப்பான' நாடுகள் எவை?... வெளியாகியுள்ள 'பட்டியல்'...
- "மகள் குணமடைந்து இறுதிச்சடங்கை நடத்துவாள்..." 'மறைந்த' பின்னும் 'நம்பிக்கையுடன்' காத்திருக்கும் தாயின் சடலம்...' 'கொரோனா' ஏற்படுத்தும் 'ஆறாத காயங்கள்...'
- 'இது வித்தியாசமான லாக்டவுன்'... 'அசையாத பொருளாதாரம்'... உலக நாடுகளுக்கு டஃப் கொடுக்கும் பலே ஐடியா!
- உள்நாட்டு, வெளிநாட்டு 'விமான' சேவைக்கான... டிக்கெட் 'முன்பதிவு' தேதிகளை 'அறிவித்த' ஏர் இந்தியா...