மறுபடியும் கோரத்தாண்டவமாடும் கொரோனா.. ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு கொரோனா.. ‘140 பேர் பலி’.. விழி பிதுங்கி நிற்கும் நாடு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரிட்டனில் நாளுக்கு நாள் ஓமிக்ரோன் வைரஸ் தொற்று அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஓமிக்ரோன் வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் ரஷ்யா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமிக்ரோன் பரவல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக பிரிட்டனில் ஓமிக்ரோன் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு நேற்று ஒரு நாள் மட்டும் 1,06,112 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 140 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தொற்று பரவலை தடுக்க அந்நாட்டு அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பிரிட்டனில் 70 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி செலுத்துக் கொண்ட நிலையில், தற்போது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் ஒரே நாளில் ஒரு லட்சம் பேருக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஓமிக்ரோன் பரவலை ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு முறை கண்காணித்து வருவதாகவும், கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை மீண்டும் அறிவிக்க தயங்கமாட்டோம் என்றும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்