'ஆண் நண்பர்களை'... 'மறைத்து வைக்க நினைத்த 15 வயது மகள்’... ‘பெற்றோர் கொடுத்த நூதன தண்டனை’... வைரலான ஜாலி வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவைச் சேர்ந்த மேட்லின் (15) என்ற சிறுமி, தனது வீட்டில் நடைபெற்ற தேநீர் பார்ட்டிக்குத் தன் ஆண் நண்பர்களைப் பெற்றோர்களுக்குத் தெரியாமல் அழைத்துள்ளார். அப்போது வீட்டுக்கு வந்த நண்பர்களை, அவர்களின் கண்களில் படாமல், ‘கில்லி’ படம்போல் மறைத்துவைக்க முயன்றபோது, மேட்லின் தன் பெற்றோரிடம் மாட்டிக்கொண்டார்.
இனிமேல், தங்கள் மகள் இப்படி செய்யக்கூடாது என நினைத்த பெற்றோர், 2 விதமான நூதனத் தண்டனை மகளுக்கு கொடுத்தனர். அதாவது, மேட்லின் ஒரு மாதம் மொபைல் பயன்படுத்தக் கூடாது அல்லது 2 வாரங்களுக்கு மேட்லினின் சோஷியல் மீடியா பக்கங்களை பெற்றோர்கள் பயன்படுத்துவார்கள் என்பதுதான். இதில் இரண்டில் எத பெஸ்ட் தண்டனை என்று நீயே முடிவு செய்துகொள் என்று பெற்றோர் கூறியுள்ளனர். மொபைல் இல்லாமல் ஒரு நாள்கூட இருக்க முடியாது என்று எண்ணிய மேட்லின், பெற்றோர் சொன்ன 2-வது தண்டனையை ஏற்றுக்கொண்டார்.
அதன்படி மேட்லினின் சோஷியல் மீடியாவை, அவரின் பெற்றோர் எடுத்துக் கொண்டனர். அதன்பிறகு நடந்ததுதான் அட்டகாசமான சம்பவங்கள். மேட்லினின் அப்பா லாரி சம்ப்டர், மேட்லினின் இன்ஸ்டாகிராம், டிக்-டாக் பக்கங்களில், தான் எடுக்கும் வித்தியாசமான புகைப்படங்களையும், நகைச்சுவை வீடியோக்களையும் பதிவிட ஆரம்பித்தார். மேலும் இன்ஸ்டாகிராமில் மேட்லினின் புகைப்படத்தைப் பதிவிட்ட பெற்றோர், ‘இது மேடி. இவள் தனது சோஷியல் மீடியா கன்ட்ரோலை, தனது பெற்றோருக்கு 2 வாரங்களுக்கு கொடுத்துவிட்டதால், அதில் நீங்கள் சுவாரஸ்யமான சில பதிவுகளை அவளின் பெற்றோரிடமிருந்து எதிர்பார்க்கலாம் என்று ஜாலியாக பதிவிட்டனர்.
பின்னர் அரைகுறை ஆடைகளுடன் மேட்லினின் தந்தையும், அவர் நண்பரும் சேர்ந்து சேட்டைகள் செய்ய ஆரம்பித்தனர். மேலும், அவர் பெண்களின் உடை அணிந்து பதிவிட்ட புகைப்படங்களும் வீடியோக்களும், அதிகளவில் லைக்குகளையும் கமென்ட்களையும் பெற்றன. இதனை சமாளிக்க முடியாமல், மேட்லின் தன் பெற்றோரிடம் சென்று, தான் ஒரு மாதம் மொபைல் இல்லாமல் இருக்கும் தண்டனையையே ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார். ஆனால், தங்களது வாக்கை திரும்பி வாங்கப் போவதில்லை என்று அவரது பெற்றோர் மறுத்துள்ளனர். அமெரிக்காவில் தற்போது திடீரென பிரபலமாகியுள்ள இந்த அதகள பெற்றோரின் புதிய சோஷியல் மீடியாவில் புதிதாக பலர் இணைந்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அப்பா வேண்டாம்'...'கதறிய மகள்'...'பைக்குள் இருந்து வந்த நாற்றம்'...நடுங்க செய்யும் தந்தையின் செயல்!
- '12 வயசு மகள் சார்!'.. 'தாயின் உதவியுடன் சிறுமியை பலாத்காரம் செய்த 3 பேர்'.. அதிர வைத்த சம்பவம்!
- 'மன்னிச்சிருங்க அப்பா!'.. 'மூங்கிலால் ஓங்கி தாக்கி.. கொசு கொல்லி ஸ்ப்ரே அடித்து'.. கடிதத்தால் சிக்கிய 19 வயது மகள்!
- 'சங்க அறுத்துட்டு போய்ட்டே இருப்பேன்!'.. மூத்த தாரத்தின் 9 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!.. வீடியோவால் பரபரப்பு!
- திடீரென ‘தாயிடமிருந்து’.. ‘சிறுவனை’ தூக்கிக் கொண்டு ஓடிய ‘இளைஞர்’.. ‘பிரபலமாக’ செய்த ‘நடுங்க வைக்கும் காரியம்’..
- ‘கடற்கரையில் மிதந்த சூட்கேசில்'... 'உடல் பாகங்கள்’... 'ஸ்வெட்டரில் இருந்த க்ளூ’... ‘சிக்கிய மகள், ஆண் நண்பர்’!
- ‘21 மாடி’ கட்டிடத்திலிருந்து.. ‘தூக்கி வீசப்பட்ட’ பச்சிளம் குழந்தை.. ‘நடுங்க வைக்கும்’ சம்பவம்.. வெளியாகியுள்ள ‘அதிர்ச்சி தகவல்கள்’..
- ‘4 பேரும் என்கவுண்ட்டரில் சுட்டு கொலை’... ‘பெண் மருத்துவரின்’... ‘தந்தை உருக்கமான வார்த்தை’!
- 'ஸ்கூல் வாசல் முன்பு'... '5 வயது மகள் கண்முன்னே'... 'இளம் ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம்'... 'உறைய வைக்கும் சம்பவம்'!
- ‘மகள், மகனைக் கொலை செய்துவிட்டு’.. ‘பிசினஸ் பார்ட்னருடன்’ சேர்ந்து.. ‘கணவன், மனைவி’ செய்த அதிர்ச்சி காரியம்.. ‘நடுங்க வைக்கும் சம்பவம்’..