லட்சக்கணக்கில் நாடு கடத்தப்பட்ட பூனைகள்.. இந்த நாட்டுல மக்கட்தொகையை விட பூனை எண்ணக்கை அதிகமாம்.. ஓஹோ இதான் காரணமா?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஒருநாட்டின் மக்கள் தொகையை விட, அங்கிருக்கும் பூனைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை கற்பனை செய்துபார்க்க முடிகிறதா? உண்மைதான். அப்படி ஒரு தீவு உலகில் இருக்கிறது.

Advertising
>
Advertising

பூனைகள் வளர்ப்பது பலருக்கும் பிடித்துப்போய்விடுகிறது. இன்று மட்டுமல்ல, பழங்காலத்திலேயே மக்கள் பூனைகளை வளர்த்திருப்பதற்கான சான்றுகள் நிறையவே இருக்கின்றன. சொல்லப்போனால், பூனைகளை கடவுளாக வழிபட்ட மக்களும் இருந்திருக்கிறார்கள். அப்படி, மனித வாழ்க்கையோடு பிணைந்த பூனைகள் பற்றிய பல வரலாறு தகவல்கள் நம்மை ஆச்சரியப்படுத்தும் தன்மை கொண்டவை. அந்த வகையில் மத்திய தரைக்கடலில் அமைந்துள்ள சைப்ரஸ் நாடு பூனைகளுக்கு பெயர்போனது. இங்கே உள்ள மக்கள் தொகையை காட்டிலும், இங்குள்ள பூனைகளின் எண்ணிக்கை அதிகமாகும்.

எங்கும் பூனை

குட்டி தீவு நாடான இங்கே எங்கு பார்த்தாலும் பூனைகளே இருக்கின்றன. இந்த நாட்டின் மக்கள் தொகை 1.2 மில்லியன் ஆகும். அதேவேளையில் அங்கு வசித்துவரும் பூனைகளின் எண்ணிக்கை 1.5 மில்லியனாக கணிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் என்றால், சைப்ரஸ் மக்கள் அனைவரும் பூனைகளிடத்தில் மிகுந்த பாசம் கொண்டிருக்கின்றனர். ஆதரவற்ற, தெருவில் வசிக்கும் பூனைகளுக்கு உணவு கொடுக்க அந்நாடே மாபெரும் உணவுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

சுவாரஸ்யமான வரலாறு

இவ்வளவு பூனைகள், சைப்ரஸ் நாட்டிற்கு எப்படி வந்தன? என்ற கேள்விக்கு பல சுவாரஸ்ய தகவல்கள் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை புனைகதைகள் தான். ஆனால், வெகுகாலமாக மக்களால் நம்பப்படுவது, வெளிநாடுகளில் இருந்து இங்கே பூனைகள் கடத்திவரப்பட்டதாக சொல்லப்படும் கதைதான்.

கான்ஸ்டான்டினோப்பிளின் ஹெலினா என்றும் அழைக்கப்படும் ரோமானியப் பேரரசி செயிண்ட் ஹெலினா, ஒரு மடாலயத்திலிருந்து பாம்புகளை விரட்டுவதற்காக நூற்றுக்கணக்கான பூனைகளை எகிப்திலிருந்து சைப்ரஸுக்கு கி.பி 328 இல் அனுப்பினார் என்று நம்பப்படுகிறது.

கிளியோபாட்ரா

ஆனால், மேற்கூறிய கருத்துகளுக்கு ஒரு முரண்பாடான புராணக்கதை இருக்கிறது. பண்டைய எகிப்தின் ஆட்சியாளரான கிளியோபாட்ரா தான் பாம்புகளை அழிக்க உரோமம் கொண்ட பூனைகளை கொண்டு வந்ததாக கூறுகிறது அந்தக் கதை. இந்த இரண்டு கதைகளில் எது உண்மை எனத் தெரியவில்லை. ஆனால், 12 லட்சம் பூனைகள் தற்போது சைப்ரஸ் நாட்டில் இருப்பது மட்டும் உண்மை.

கிமு 7,500 க்கு முந்தைய தொல்பொருள் சான்றுகளில் சைப்ரஸ் நாட்டில் பூனைகள் வீட்டில் வளர்க்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அதேபோல, 9,500 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மனிதனும் பூனையும் ஒன்றாக புதைக்கப்பட்ட கல்லறை ஒன்றும் இங்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

CAT, CYPRUS, HISTORY, பூனை, சைப்ரஸ், வரலாறு

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்