ஆபத்தான இடத்துல Photoshoot.. "ஏதாவது விபரீதம் ஆகிருந்தா‌..??.." பரபரப்பை ஏற்படுத்திய புகைப்படங்கள்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சமீப காலமாகவே திருமண ஜோடிகள் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்துவதும், மிகவும் வித்தியாசமான முறையில் ஏதாவது ஒரு இடத்திற்கு சென்று போட்டோ அல்லது வீடியோ எடுத்துக் கொள்வதும் வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.

Advertising
>
Advertising

இதன் பெயரில், அடிக்கடி புதுமண ஜோடிகளின் போட்டோஷுட் படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாவதை அதிகம் நாம் பார்த்திருப்போம்.

அந்த வகையில், தற்போது புது ஜோடி ஒன்று நடத்திய போட்டோ ஷூட் தொடர்பான புகைப்படங்கள், இணையத்தில் அதிகம் வைரலாகி சற்று பரபரப்பையும் உண்டு பண்ணியுள்ளது.

இப்டி ஒரு இடத்துலயா Photoshoot?..

Croatia என்னும் நாட்டைச் சேர்ந்தவர் கிறிஸ்டின். இவரது மனைவியின் பெயர் ஆண்ட்ரியா. கிறிஸ்டின் - ஆண்ட்ரியா ஜோடிக்கு பயணம் செய்வது என்பது மிகவும் பிடித்தமான விஷயம். இதில், கிறிஸ்டின் சுமார் 150 நாடுகள் வரை பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. தொடர்ந்து, தங்களின் திருமண போட்டோஷூட்டையும் மிக வித்தியாசமான இடத்தில் வைத்து எடுக்க திட்டம் போட்டுள்ளன்ர். அதன்படி, சுமார் 200 பெட்டிகள் வரை கொண்ட மிக நீளமான (சுமார் 2 கி.மீ நீளம்), மிக ஆபத்தான ரயிலில், இதனை எடுத்துள்ளனர்.

மிகவும் நீளமான ரெயில்

ஆப்பிரிக்காவில் உள்ள சஹாரா பாலைவனத்தின் வழியாக, சுமார் 700 கிலோ மீட்டர் தூரத்தை 20 மணி நேரத்தில் இந்த ரெயில் பயணம் செய்யும். அப்போது, பகலில் 45 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலைக்கு அதிகமாகவும், இரவு ஜீரோ டிகிரி வெப்ப நிலைக்கு குறைவாகவும், புழுதி நிறைந்த ஒரு கடுமையான பயணமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அப்படி ஒரு ரயில் பயணத்தில், அனைத்து பெட்டிகளிலும் இரும்புத் துகள் நிறைந்த இடத்தில் தான், கிறிஸ்டினா மற்றும் ஆண்ட்ரியா ஜோடி தங்களின் திருமண புகைப்படங்களை கடந்த சில தினங்களுக்கு முன் எடுத்துள்ளது. இதில் வித விதமான போஸ்களும், பல பல ஆடைகளும் அணிந்து அவர்கள் புகைப்படங்களை எடுத்து உள்ளனர்.

நெட்டிசன்கள் கருத்து

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து சிலர் தெரிவிக்கையில், இரும்பு துகள் நிறைந்த ஒரு ரயில் மீது, அதுவும் வெப்பநிலை மாறி மாறி உள்ள ஒரு பயணத்தின் போது இப்படி செய்தால், நிச்சயம் ஆபத்தாக இருக்கும் என்றும், இதை பார்க்கும் மற்ற சிலரும் இதனை பின்பற்ற முயற்சி செய்தால் என்ன ஆகும் என்பது போன்ற கருத்துக்களையும் குறிப்பிட்டு வருகின்றனர்.

PHOTOSHOOT, SAHARA DESERT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்