'ஓ மை காட்'... 'இதையா எங்க நாட்டுக்குள்ள கொண்டு வர பாத்தீங்க'... 'இந்திய பயணி வைத்திருந்த பார்சல்'... அதிர்ந்துபோன அமெரிக்க அதிகாரிகள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வாஷிங்டன் விமான நிலையத்தில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தில் இருக்கிறது. முதல் அலையை விட இரண்டாவது அலையில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் ஆக்சிஜன் மற்றும் மருத்துவமனையில் படுக்கைக்கு அல்லாடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இரு ஒரு புறம் இருக்க உத்திர பிரதேசம் போன்ற பகுதிகளில் தினமும் தொலைக்காட்சிகளில் பார்க்கும் காட்சிகள் மனதை நொறுக்குவதாக உள்ளது.

இதனால் மக்கள் யாரும் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். அதே நேரத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்வதும், ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதும் தான் தற்போதைய நிலையிலிருந்து விடுபட உண்மையான தீர்வாக இருக்க முடியும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் சிலர் பிற்போக்குத் தனமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மாட்டுச்சாணத்தை உடலில் பூசிக்கொள்வது, மாட்டின் சிறுநீரைப் பருகுவது எனச் செய்யும் செயல்கள் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டால் மருத்துவரை நாடாமல் போகச்செய்யும் சூழ்நிலையை உருவாக்கிவிடும் என மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளார்கள். மேலும்  உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுரேந்திர சிங் உள்ளிட்டோர் மாட்டின் சிறு நீரைப் பருகினால் கொரோனா பாதிப்பு ஏற்படாது எனக் கூறி வந்தது கடும் சர்ச்சையை உருவாக்கியது.

இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில்  வாஷிங்டன் விமான நிலையம் ஒன்றில் இந்தியர் ஒருவரைப் பரிசோதனை செய்ததில், அவரிடம் பை நிறைய வறட்டி எனப்படும் மாட்டுச்சாணம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைப் பார்த்த விமான நிலைய அதிகாரிகள் அதிர்ந்துபோனார்கள். அமெரிக்காவில் மாட்டுச்சாணம் தடைசெய்யப்பட்டுள்ளது. அவை கால்நடைகளுக்குக் கால் மற்றும் வாய் தொற்று நோயை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

சமீப காலமாக அங்குக் கால்நடை உரிமையாளர்களை இந்த நோய் பெரிதும் அச்சுறுத்தி வருகிறதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக மாட்டுச்சாணத்தை உடலில் பூசிக்கொள்வது போன்ற பிற்போக்குத்தனமான காரியங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் அமெரிக்காவில் இந்தியரிடம் இருந்து மாட்டுச்சாணம் கைப்பற்றப்பட்டிருப்பது பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்