'கோவிஷீல்டு' தடுப்பூசி போட்டவங்களுக்கு ஒரு 'குட்' நியூஸ்...! ஆனா ஸ்ட்ரிக்டா 'அத' மட்டும் follow பண்ணுவோம்...! - அறிவித்த நாடு...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்குள் நுழைவதற்கு செலுத்தியிருக்க வேண்டிய கொரோனா தடுப்பூசிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும், உருமாறிய கொரோனா வகை காரணமாகவும் பல உலக நாடுகள் தங்கள் நாடுகளுக்கு வரும் பயணிக்களுக்கு கடும் கட்டுப்பாட்டை விதித்துள்ளது. இந்த நிலையில், தற்போது ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்குள் நுழைய செலுத்தி இருக்கவேண்டிய தடுப்பூசிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
அதில், இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா செனகா நிறுவனம் உருவாக்கியுள்ள அஸ்ட்ரா செனகா தடுப்பூசியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
இந்த தடுப்பூசி தான் இந்தியாவில் 'கோவிஷீல்டு' என்ற பெயரில் சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள இந்த தடுப்பூசி, பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசிகளின் பட்டியலில் 'அஸ்ட்ரா செனகா' தடுப்பூசியின் பெயர் இடம் பெற்றிருந்ததே தவிர, 'கோவிஷீல்டு' தடுப்பூசியின் பெயர் அதில் இடம்பெறாததால், இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த விவகாரம் குறித்து இந்திய அரசு சார்பில் இந்த விவகாரம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திடம் தெரிவித்த நிலையில், பல்வேறு ஐரோப்பிய யூனியன் நாடுகள் கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்திக் கொண்டவா்களையும் அனுமதிக்க சம்மதம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிரான்ஸ் பிரதமா் ஜீன் கேஸ்டக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அஸ்ட்ரா செனகாவால் உருவாக்கப்பட்டு, இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவா்கள் வெளிநாடுகளிலிருந்து பிரான்ஸ் வருவதற்கு அனுமதிக்கப்படுவாா்கள்.
இருப்பினும் தற்போது புதுவகையான டெல்டா வகைக் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக எல்லைகளில் சோதனைகள் கடுமையாக்கப்படும்' என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கொரோனா யுத்தம்’!.. அடுத்த ‘100 நாள்’ ரொம்ப கவனமாக இருக்கணும்.. டாக்டர் வி.கே.பால் எச்சரிக்க காரணம் என்ன..?
- 'இந்தியாவில் கொரோனா 3வது அலை... ஆகஸ்ட் மாதத்தில் தாக்கும்'!.. ஐசிஎம்ஆர் திட்டவட்டம்!.. பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன?
- 111 நாடுகளில் பரவிய ‘டெல்டா’ வைரஸ்.. ‘கொரோனா 3-வது அலையை நெருங்கிட்டோம்’.. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!
- 'எவ்வளவு பேரோட கனவு!.. எல்லாமே போச்சா'!?. விளையாட்டு வீரர்களுக்கு இடியாக வந்த தகவல்!.. ஒலிம்பிக் போட்டிகள் ரத்தாகிறதா?
- தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறப்பு?.. உயர் அதிகாரிகள் அவசர மீட்டிங்!.. முழு விவரம் உள்ளே
- 'தடுப்பூசி பற்றாக்குறையா?.. அது யாரோட தவறு'?.. தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளை... காட்டமாக விமர்சித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்!
- ‘எல்லாம் கைகூடி வர நேரத்துல இப்படியா நடக்கணும்’!.. கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 4,400 கோடி அபராதம் விதித்த பிரான்ஸ்.. பரபரப்பில் ‘Tech’ உலகம்..!
- இந்தியாவின் முதல் கொரோனா நோயாளிக்கு ‘மீண்டும்’ நோய் தொற்று.. மருத்துவ அலுவலர் வெளியிட்ட முக்கிய தகவல்..!
- அல்ரெடி 'அந்த வைரஸ்' 104 நாடுகளுக்கு பரவிடுச்சு...! 'அதோட விளைவுகள் ரொம்ப மோசமா இருக்க போகுது...' - எச்சரிக்கும் WHO நிறுவனர்...!
- ‘அதுக்குள்ள என்ன அவசரம்’.. இப்படியே போச்சுன்னா கொரோனா ‘3-வது அலை’ கன்ஃபார்ம்.. இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை..!