'இப்படியா வெண்ணை திரண்டு வரும்போது பானை உடையணும்??'.. உலக நாடுகள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்த 'கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை நிறுத்தம்!'.. பரபரப்பு காரணம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வரும் நிலையில், இந்த நோய்த் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் முன்னணி நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன. 

அவ்வகையில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆஸ்ட்ரா செனகா நிறுவனம் உலக அளவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை தயாரித்ததாக கூறப்பட்டதுடன், மருத்துவ பரிசோதனையில் இருந்த  AZD1222- என்கிற இந்த தடுப்பூசிதான் மிகவும் எதிர்பார்க்கப்படும் தடுப்பு மருந்தாகவும் கருதப்பட்டது.

உலக அளவில் இறுதி கட்ட பரிசோதனையில் உள்ள 9 தடுப்பூசிகளில் ஆஸ்ட்ரா செனகாவும் ஒன்று என கூறப்படும் நிலையில், அமெரிக்காவில் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி , 30 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு இந்த தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஆனால் ரேண்டம் முறையில் தன்னார்வலருக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவால் ஆஸ்ட்ரா செனகா தடுப்பூசி பரிசோதனை தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இதிலுள்ள பாதுகாப்பு தரவுகள் குறித்து தங்களின் தன்னிச்சை குழு ஆய்வு செய்ய உள்ளதாகவும் நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

எனினும், உடல்நலக்குறைவுக்குள்ளான தன்னார்வலருக்கு எப்படியான உடல் நலப்பிரச்சினை ஏற்பட்டது என்பன போன்ற எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை என்பதும் வெற்றிகரமாக முடிவடைந்த முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகளை அடுத்து, சந்தைக்கு வரக்கூடிய முதல் கொரோனா தடுப்பூசி இதுவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்படியானதொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்