'பிரிட்டன்' பிரதமரைத் 'தொடர்ந்து'.. 'கொரோனா' உறுதி செய்யப்பட்ட 'அடுத்த பிரதமர்'.. தற்காலிக ஓய்வு பெறுவதாக அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவின் வுஹான் நகரத்தில் உருவாகத் தொடங்கி உலகம் முழுவதும் பரவினாலும் ஐரோப்பிய நாடுகளில்தான் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

இந்த நிலையில் ரஷ்யாவில் கொரோனா நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமான நாடுகளில் ரஷ்யா கடந்த வாரம் 10-வது இடத்தில் இருந்த நிலையில் தற்போது நோய்த்தொற்று அதிகமானதால் மாஸ்கோவில் அனைவருக்கும் பரிசோதனை செய்வதற்கு அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மார்ச் மாதத்திலிருந்து கொரோனா பாதிப்பு ரஷ்யாவில் அதிகமாக இருந்ததால் அந்நாட்டு அதிபர் புதின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வந்துகொண்டிருந்தார். இந்தநிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து ரஷ்யா 8-வது இடத்திற்கு நகர்ந்துள்ளது. ஆனால் சீனா மற்றும் ஈரான் நாடுகளை ஒப்பிடுகையில் ரஷ்யாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது.

இதுவரை 1 லட்சத்து 6 ஆயிரத்து 491 பேருக்கு ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் 1,073 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரு நாள் மட்டும் 7 ஆயிரத்து 99 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ரஷ்யாவில் ஊரடங்கை மே 11-ஆம் தேதி வரை நீட்டித்து அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே நேற்று ரஷ்ய நாட்டின் பிரதமர் மிகைல் மிஷிஸ்தின் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அந்த முடிவில் அவருக்கு கொரோனா உறுதியான  நிலையில் தற்போது தன்னுடைய பணியில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கி இருக்கப் போவதாக பிரதமர் மிஷிஸ்தின் ரஷ்ய அதிபரிடம் தெரிவித்துள்ளார். முன்னதாக இங்கிலாந்து பிரதமருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பின்னர் அவர் குணமடைந்த நிலையில், தற்போது ரஷ்யப் பிரதமருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்