'இத மட்டும் எங்களால தாங்கவே முடியல... உலக நாடுகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்!'.. மனமுடைந்த உலக சுகாதார அமைப்பு!.. என்ன நடந்தது?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஐரோப்பிய முதியோர் காப்பகங்களில் கற்பனை செய்ய முடியாத மனித இழப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்து உள்ளது.

ஐரோப்பாவில் இதுவரை பதிவான கொரோனா இறப்புகளில் பாதிக்கும் மேல் முதியோர் காப்பகங்களில் நேர்ந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இது கற்பனை செய்ய முடியாத மனித இழப்பு என்று உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.

உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய கண்டத்திற்கான பிராந்திய தலைவர் ஹான்ஸ் குளூக் இந்த விவகாரம் தொடர்பில் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், ஐரோப்பிய பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் மதிப்பீடுகளின்படி, கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கையில் பாதி பேர் வரை நீண்டகால முதியோர் இல்லங்களில் வசிப்பவர்கள் என குளூக் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒட்டுமொத்த ஐரோப்பியாவில் கொரோனாவுக்கு சுமார் 1,00,000 மக்களுக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். ஒவ்வொரு நாடு வாரியாக கணக்கிடாமல், இந்தக் கடுமையான புள்ளிவிவரங்கள் சமூகப் பராமரிப்பில் அரசாங்கங்கள் அதிக அளவில் முதலீடு செய்வதற்கான ஒரு பாடமாக இருக்க வேண்டும் என க்ளூக் கேட்டுக்கொண்டார்.

இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விற்றி, முதியோர் காப்பகங்களில் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைத்து மதிப்பிடப்படக்கூடும் என்று ஒப்புக் கொண்டதை அடுத்தே,

உலக சுகாதார நிறுவனத்தின் பிராந்திய தலைவர் ஹான்ஸ் குளூக் மேற்குறிப்பிட்ட தகவலை வெளியிட்டுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்