கொரோனாவால் பாதிக்கப்பட்டவரது 'உடலில்' நோயெதிர்ப்பு சக்தி... எத்தனை 'நாட்கள்' இருக்கும்?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவரது உடலில் நோயெதிர்ப்பு சக்தி எத்தனை நாட்கள் இருக்கும் என்பது குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து லண்டனை சேர்ந்த கிங்ஸ் என்னும் கல்லூரி சார்பில் ஆய்வொன்று நடத்தப்பட்டது.

இதில் கொரோனாவில் இருந்து குணமடைந்து 3 வாரங்கள் வரை மட்டுமே நோயெதிர்ப்பு சக்தி அதிக திறனுடன் இருப்பது கண்டறியப்பட்டது. அதன் பின்னர் நோயெதிர்புய சக்தி வேகம் குறைந்தது. 60% நோயாளிகளுக்கு வலிமையான நோய் எதிர்ப்பு சக்தி இருந்தபோதிலும், 17% நோயாளிகளுக்கு மட்டுமே 3 மாதங்கள்வரை நோய் எதிர்ப்பு சக்தி நீடித்தது.

3 மாத காலத்தில் நிறைய பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி 23 மடங்கு குறைந்துவிட்டது. சிலருக்கு முற்றிலுமாக போய்விட்டது. இப்படி குணமடைந்தவர்களுக்கு பருவநிலை மாற்றத்தின்போது, மீண்டும் கொரோனா தாக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்