“இந்த கொரோனா வைரஸின் அடுத்த கட்டம்தான் என்ன?” - ‘உலக சுகாதார மையம்’ வெளியிட்டுள்ள ‘பரபரப்பு’ தகவல்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவும் என்றும் நாம் கடுமையான காலத்தை நோக்கி போகவிருக்கிறோம் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது.

இதுகுறித்து பேசிய உலக சுகாதார அமைப்பு, கொரோனா வைரஸ் தோற்றத்தை பற்றி சீனா தெளிவாக கூறவில்லை, ஆனால் தெற்காசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகமாகியுள்ளது. அத்துடன் மொத்த மக்கள்தொகையில் 10 பேரில் ஒருவருக்குக் கொரோனா பாதிப்பு உள்ளதால் இந்த வைரஸ் தொடர்ந்து பரவும் என்றும் இனிமேல்தான் நாம் கடுமையான காலத்தை நோக்கி போகவிருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சீனாவை விசாரிப்பதற்கு சிறப்பு அதிகாரிகளுடன் கூடிய குழு ஒன்றை நியமித்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளார்.

சீனாவின் வூஹான் நகரில் தொடங்கி, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆசிய நாடுகள் வரை பரவி லட்சக்கணக்கான உயிர்களை பறித்த கொரோனா வைரஸ் சீனாவின் வூஹான் சந்தையில் உருவாகவில்லை என்றும், அது  ஆய்வகங்களில் உருவானது என்றும் அமெரிக்க நாளிதழ்கள் தெரிவித்ததுடன்,  அதிபர் ட்ரம்ப்பும் கொரோனா வைரஸ் சீன ஆய்வகங்களில் உருவாக்கப்பட்டதற்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் சீனாவுக்கு ஆதரவாகவே உலக சுகாதார அமைப்பின் தலைவர் அதானன் டெட்ராஸ் செயல்படுவதாகவும் ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்