ஊரடங்கு நேரத்துல இப்டியா 'எல்லை' மீறுவீங்க?... 'திருமணமாகாத' ஜோடிக்கு கிடைத்த 'கடுமையான' தண்டனை!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஊரடங்கு நேரத்தில் ஹோட்டலில் உல்லாசம் அனுபவித்த ஜோடிக்கு, பிரம்படி தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது.

கொரோனா பரவலை தடுக்க உலகம் முழுவதும் தற்போது ஊரடங்கு கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதுவரை தடுப்பூசி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் சமூக இடைவெளி, ஊரடங்கு ஆகியவை மட்டுமே கொரோனா பரவலை தடுக்க தற்காலிக நிவாரணமாக உள்ளது. இதற்கிடையில் ஊரடங்கு நேரத்தில் வெளியே  சுற்றுபவர்கள் மற்றும் விதிகளை மீறுபவர்களுக்கு பல்வேறு நாடுகளும் நூதன முறைகளில் தண்டனை வழங்கி வருகின்றன.

அந்த வகையில் இந்தோனேசியா நாட்டில் ஊரடங்கை மீறி ஹோட்டலில் உல்லாசம் அனுபவித்த திருமணமாகாத ஜோடிக்கு அந்நாடு பிரம்படி தண்டனையை வழங்கி உள்ளது. இந்தோனேசியா நாட்டில் தற்போது பகுதிநேர ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் அங்குள்ள பண்டா ஏஸ் நகரில் நேற்று முன்தினம் திருமணமாகாத ஜோடி ஒன்று ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து உல்லாசம் அனுபவித்தது.

இதை கண்டறிந்த மாகாண போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து வந்து பொதுமக்கள் முன்னிலையில் நிறுத்தி, தலா 40 பிரம்படிகளை இருவருக்கும் தண்டனையாக வழங்கினர். இதேபோல மது அருந்திய 4 பேருக்கும் தலா 40 பிரம்படிகள் கிடைத்தது. பொதுவாக இதுபோல தண்டனை வழங்கப்படும் போது பொதுமக்கள் கூட்டமாக வந்து வேடிக்கை பார்த்து செல்வார்கள்.

ஆனால் தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் வெறும் 10,15 பேர் மட்டுமே தண்டனை வழங்கப்படுவதை காண நேரில் வந்திருந்தனர். அவர்களும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி தள்ளித்தள்ளி நின்றே 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்