உலகிலேயே கொரோனா 'ரொம்ப' கம்மியாக இருக்கும்... 'டாப் 5' நாடுகள் இதுதான்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனாவால் குறைவாக பாதிக்கப்பட்ட 5 நாடுகள் குறித்த பட்டியல் வெளியாகி இருக்கிறது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 5 நாடுகள் குறித்து நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் குறைவாக பாதிக்கப்பட்ட 5 நாடுகள் குறித்து அதிகமாக நமக்கு தெரிவதில்லை. இந்த நிலையில் அந்தந்த நாடுகள் அளிக்கும் தரவுகளில் இருந்து கொரோனா குறைவாக இருக்கும் 5 நாடுகள் குறித்த பட்டியலை ஜான்ஸ் ஹாஃப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.

1. மேற்கு சஹாரா

மேற்கு சஹாரா பகுதியில் 10 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் ஸ்பெயினின் காலனி நாடாக இருந்த இந்த பகுதி, 1975-ம் ஆண்டு மொரோக்கோவுடன் இணைக்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து தனி நாடு அந்தஸ்து கேட்டுப் போராடி வருகிறது.

2. ஹோலி சீ

இங்கு 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். வத்திகான் என்று அழைக்கப்படும் இந்த நாட்டில் தான் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகம் உள்ளது.

3. பப்புவா நியூ கினியா

ஏராளமான தமிழர்கள் வசிக்கும் இந்த நாட்டில் 16 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். உலகின் கிழக்குப் பகுதியில் இருக்கும் இந்நாடு உலகின் இரண்டாவது மிகப்பெரிய தீவாகும். இங்கு மட்டும் 700 மொழிகள் பேசப்படுகின்றன.

4. செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்

இந்த நாட்டில் இதுவரை மொத்தமாக 17 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். 269 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த நாட்டின் மக்கள் தொகை 52 ஆயிரம் ஆகும்.

5. டொமினிக்கா

கரீபியன் கடற்பகுதியில் அமைந்திருக்கும் ஒரு தீவு நாடு. 73 ஆயிரம் பேர் வசிக்கும் இந்த நாட்டில் இதுவரை 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்