கொரோனா ரொம்ப வேகமா 'பரவுறதுக்கு' இதுவும் ஒரு முக்கிய காரணம்... ஐ.நா எச்சரிக்கை!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் பரவிய கொரோனா தற்போது உலகின் அனைத்து நாடுகளிலும் பரவிவிட்டது. அதற்கான தடுப்பூசி தயாரிப்பதில் வல்லரசு நாடுகள் மட்டுமின்றி வளரும் நாடுகளும் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன. இதற்கு மத்தியில் உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டறிந்து விட்டதாக ரஷ்யா பெருமையுடன் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் பின்தங்கிய நாடுகளில் கொரோனா வேகமாக பரவிட தண்ணீர் பற்றாக்குறை ஒரு முக்கிய காரணம் என ஐ.நா தெரிவித்து இருக்கிறது. குடிநீர் பற்றாக்குறை நிலவும் பின்தங்கிய நாடுகளில், கை கழுவுவதற்கு போதிய தண்ணீர் இல்லை. இதனால் அங்கு ஐந்தில் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

இதுகுறித்து ஐ.நா.மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''உலகம் முழுவதும் 300 கோடி மக்களுக்கு சுகாதாரமான தண்ணீர் கிடைப்பதில்லை எனவும், இதனால் வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ளும் அளவிற்கு, அவர்களுக்கு சுகாதாரமான வாழ்க்கை இன்னும் கிடைக்கவில்லை,'' என குறிப்பிட்டுள்ளது.

உலகளவில் உள்ள மற்ற பின்தங்கிய நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் தண்ணீர் பிரச்சினை அவ்வளவாக இல்லை என்பது மிகவும் ஆறுதலான விஷயம் என நிபுணர்கள் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்